Saturday, 26 March 2016

One inch difference

image
ஒரு இஞ்ச் வித்தியாசம்.
காஞ்சிபுரத்தில், எண்ணியது நிறைவேறும்!  ப்ரஹ்மஸ்ரீ வேதபுரி மாமா, ஒருநாள் பெரியவாளிடம் கேட்டார்…..“பரமேஸ்வரன், அம்பாள், மஹாவிஷ்ணு, பிள்ளையார், முருகன்-ன்னு எல்லா தெய்வங்களும் இங்க…காஞ்சிபுரத்ல இருக்காடா! இதவிட, காஸிதான் விஸேஷம்-ன்னாலும் காஞ்சிபுரமும், அதுக்கு ஸமமான ஸ்தலம்! ஒனக்குத் தெரியுமோ?……..
…….இங்க, காஞ்சிபுரத்ல ஏழு கொளம் இருக்கு! இதுல….. தெனோமும் ஒரு கொளத்ல ஸ்நானம் பண்ணிட்டு, எல்லாக் கோவிலுக்கும் போயி ஸ்வாமி தர்ஸனம் பண்ணிட்டு, மனஸ்ல வேண்டிண்டா….. நெனச்ச கார்யம் கட்டாயமா நடக்கும்!….”
ஸீரியஸ்ஸாக பேசிக் கொண்டே வந்தவர், திடீரென்று ஒரு நமுட்டு சிரிப்போடு, தன் “குழந்தை சிஷ்யனைப் பார்த்து……
“காஸி-ங்கறதை பிரிச்சு சொல்லு பாக்கலாம்!…”
“கா……..ஸி…..!..”
“பேஷ்! காஞ்சி…..பிரிச்சு சொல்லு பாக்கலாம்”
“கா……ஞ்…….சி……”
“பாத்தியா? பாத்தியா? காஸிக்கும் காஞ்சிக்கும், ஒரு ‘ஞ்’ [inch] தாண்டா வித்யாஸம்!….”
அதிஸயித்தார் ஶசிஷ்யர்! என்ன அழகான ‘தங்க்லீஷ்’ ஸ்லேடை!
காஸியில் கபாலீஸ்வரனாய், காஞ்சியில் காமாக்ஷியாய் அருள்பாலிக்கும் நம் காஞ்சிநாதன், அத்வைதாச்சார்யனாகவும் இருப்பதால், நமக்கும் அவருக்கும் அணுவளவு inch கூட ஜீவ-ப்ரஹ்ம பேதம் இல்லாமல் அழித்து, தன்னுருவோடு சேர்த்துக் கொள்ள ப்ரார்த்தனை செய்வோம்.

No comments:

Post a Comment