Wednesday, 9 March 2016

Krishna story 8

லீலை கண்ணன் கதைகள்........8
மகாவிஷ்ணு சிறிய குழந்தையாக மாறினார்.......

ஒருபுறம் வசுதேவர் மகாவிஷ்ணு பிறந்ததைக் கேள்விபட்டதும் கம்சன் ஆயுதத்துடன் தங்களைக் கொல்ல வருவானே! என்று கவலைப்பட்டார்.மறுபுறம் தேவகியும் கம்சனை எண்ணி பயந்து கொண்டுதான் இருந்தாள். ஆனால் இப்பொழுது தன் குழந்தை உருவில் இருப்பதை கண்டதும் இறைவனை துதிக்க ஆரம்பித்தாள். "இறைவனே! தாங்கள் மகாவிஷ்ணுவேதான் என்று எனக்கு விளங்கிவிட்டது. நல்லவர்களை வதைக்கும் கம்சனைத் தயவுசெய்து கொல்லுங்கள். மற்றத் தாய்மார்களைப் போல் நான் தங்களை என்னோடு வைத்துக்கொள்ள முடியாது. தங்களை நான் கம்சனிடம் ஒப்படைக்க வேண்டும். தங்கள் கடவுளாதலால் என் குழந்தைகள் எல்லாவற்றையும் அவன் எப்படிக் கொன்றான் என்பது தங்களுக்குத் தெரியும் . இப்போது எனக்கு இன்னொரு குழந்தை பிறந்துள்ளது என்பதைக் கேட்டவுடன் உடனே இங்கு ஓடிவந்து தங்களைப் இரக்கமின்றி கொன்றுவிடுவான். தாங்கள் தெய்விக உருவில் அவனுக்குக் காட்சியளிக்காதீர்கள். தங்களை பக்தியுடன் பூசிக்க அடியார்கள் காண வேண்டிய திருவுருவம் இது" என்று சொன்னாள்.

கம்சனைபற்றித் தேவகிக்கு இருந்த பயத்தில் அவனால் மகாவிஷ்ணுவைக் கொல்ல முடியாது என்பதை அவளால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. தாயன்பு காரணமாக சாதாரணக் குழந்தையாக மாறும்படி இறைவனை வேண்டிக் கொண்டாள்.

தேவகியின் நல்ல உள்ளதைக் கண்டு மகாவிஷ்ணு மகிழ்ச்சியடைந்தார். அவர் அவளைப் பார்த்து அன்புடன் சொன்னார், "தேவகி! நீ பெண்களுள் பரிசுத்தமானவள். நீ முன்னொரு பிறவியில் என்னை குறித்துத் தவம் செய்தாய். உன் பக்தியில் மகிழ்ந்து, நான் உன் முன்னால் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டேன். நான் உன் மகனாக பிறக்க வேண்டும் என்று நீ கேட்டாய். என்னுடைய பூர்வ அவதாரங்களிலும் நான் உன்னை என் அன்னையாக ஏற்றுக் கொண்டுள்ளேன். அதனால்தான் இப்பொழுதும் நான் உன் மகனாக பிறந்துள்ளேன். நான் உனக்கு முன்னாலும் மகனாகப் பிறந்துள்ளேன் என்று ஞாபகப்படுத்துவதர்காகத்தான் இந்த விஷ்ணு உருவை உனக்குக் காட்டினேன். நான் சாதாரணக் குழந்தையாகப் பிறந்திருந்தால் இறைவன்தான் உனக்கு மகனாகப் பிறந்தார் என்பதை நீ நம்பமாட்டாய்" என்று சொல்லிக் கொண்டே அவர் சாதாரணக் குழந்தையாக மாறினார்..

இறை பணியில்
வாசு ஜி.

No comments:

Post a Comment