Monday, 7 March 2016

Maha Sivarathri


     ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍மகா சிவராத்திரி என்றால் என்ன?


       இறைவன் லிங்கோத்பவராய் அடிமுடி தேடியும் காணாத பிரம்மா,விஸ்ணுவிற்கு காட்சியளித்த இரவே
 மஹாசிவராத்திரி.அரியும் யானும்முந்தேடும் அவ்வனற்கிரி
ஆயினது‍ என்று கந்த புராண்த்தில் பிரம்மா கூறுகிறார்.



       திருமாலும் பிரம்மாவும் தங்களுக்குள்ள போட்டியால் திருமால்
வராக உருவம் கொண்டு சிவபெருமானின் திருவடியை தேடியும்,பிரம்மா
அன்னப்பறவை உருவ‌ம் கொண்டு சிவபெருமானின் தலைமுடியை
தேடியும்,சென்றார்கள்.ஆனால் இருவராலும் அடிமுடியை காணஇயலவில்லை.
தோல்வியை ஓப்புக்கொள்ள முடியாத பிரம்மன்,சிவனின் 
முடியிலிருந்து எத்தனையோ ஆண்டுகளுக்கு முனபு நழுவி கீழ்நோக்கி
வந்து கொண்டிருந்த தாழம்பூவை தமக்கு சாதகமாக சாட்சி சொல்லுமாறுசெய்தார்.
அக்கணமே அக்னிமலை வெடித்து கோபம்கொண்ட ஈசன்
தோன்றி பிரம்மனுக்கு பூவுலகில் ஆலயத்தில் பூஜை இல்லாது போகும்   மாறும்  
தாழம்பூ   சிவபூஜைக்கு ஏற்றதல்லவென்றும் சாபம் தருகிறார்.
பிறகு தவறை ஒப்புக்கொண்ட பிரம்மாவிற்கும்,உண்மையில் நடந்த‌
திருமாலுக்கும் மலையாக அண்ணாமலையாகக் காட்சி தருகிறார்.இந்த‌
காட்சியளித்த இரவே மஹாசிவராத்திரி நாளாகும்.மஹாசிராத்திரி
நாளே இறைவன் சோதிமயமாக சிவலிங்கம்வடிவம் கொண்டு 
அண்ணாமலையாக நின்றார். 
        அடிமுடி காண முடியாத அனற் பிழம்பிலிருந்து இறைவன் 
உருவத்திருமேனி கொண்டு வெளிப்பட்ட காலம் இலிங்கோற்பவ காலம்
என்பர்.இலிங்கோற்ப காலமானது மாசிமாதம்,தேய்பிறை,சதுர்த்தசி திதி,
திருவோண ந்ட்சத்திரம் கூடிய (இரவு 11.30 மணி முதல் 1.00மணிவரை)
உள்ள நேரம்)இந்த சிவராத்திரி நாள் சிவனுக்குரிய சிறந்த நன்னாள்.
இந்நாளில் சிவபெருமானை வழிபடுவோரின் விருப்பங்களும் நிறைவேற‌
அருள்புரிக என பார்வதி தேவியார் சிவனை வேண்டினார்.சிவனும்.
வழிபடுவோரின் விருப்பங்களை  நிறைவேற்றுவதுடன்
 விருப்பங்களே எழாத உயர்த நிலையையும்
அளிப்பேன் என்றார். 

So, request all the readers to chant the name of Lord shiva manymore times and receive his blessings and all prosperity in life.

In divine service
Vasu G.


No comments:

Post a Comment