Tuesday, 8 March 2016

Do we need a day to respect women's

Below reveals is the women's day necessary to celebrate..

HappyWomen's day

மகளிர் தினத்தில்...பெண்கள்...100 முக்கிய செய்திகளை தொகுத்திருக்கிறார் ஒருவர்..

1) பன்னிரு ஆழ்வார்களில் இருந்த ஒரே பெண் ஆழ்வார் யார் ? ஆண்டாள்

2) இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதன்முதலாக பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது?
தமிழ்நாடு

3) இந்திய போலீஸ் பணியில் (ஐபிஎஸ்) சேர்ந்த முதல் பெண் யார்?கிரண்பேடி

4) முழுவதும் பெண்களுக்காக தொடங்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் எது?கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

5) உலகின் முதல் பெண் விண்வெளி வாலெண்டினா ஃதெரஷ்கோவா (ரஷ்யா)1963

6) சர்வதேச கால்பந்து போட்டியின் நடுவராக பணியாற்ற திண்டுக்கல்லை சேர்ந்த ரூபவதி என்ற பெண் தேர்வு பெற்றுள்ளார்.

7) உலகின் முதல் பெண் அதிபர் - மரியா எஸ்டெலாஃபெரான், அர்ஜெண்டினா

8) தேவருக்கு பால் கொடுத்தது :இஸ்லாமிய பெண்

9) பெண் வன்கொடுமை சட்டம் :1921

10) உலக பெண்கள் ஆண்டு :1978

11) தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி

12) நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி?விடை=மேரிகியூரி

13) பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர் -கார்கி

14) பெண்களைக் காத்திட 1930 ஆண்டில் அடையாற்றில் ஒளவை இல்லம் தொடங்கப்பட்டது

15) இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - முத்துலட்சுமி அம்மையார்

16) கற்ற பெண்களின் சிறப்பைக்கூறும் நூல் - குடும்ப விளக்கு

17) பெண் சிசு வதை தடுப்புச் சட்டம் மற்றும் உயிர் பலி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஆட்சியில் இருந்தவர் - முதலாம் ஹார்டின்ஜ் பிரபு.

18) வீட்டிலேயே தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்ட வசதியான வீட்டுப் பெண்-அம்புஜத்தம்மாள்

19) பெண் ஓவியர் - சித்திரசேனா

20) ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்த முதல் இந்தியப் பெண்மணி- ஆர்திசாகா

21) சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நாள்-அக்டோபர் 11.

22) தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் தினம் : ஜனவரி 24

23) தமிழ் நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார் : டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

24) சமீபத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் முதல் பெண் பொது இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
மஞ்சுளா

25) Green Oscar எனப்படும் Wild Screen Panda Award பெற்ற முதல் இந்திய பெண் யார் ?
ஆஷ்விகா கபூர்

26) தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன? காளியம்மாள்

27) பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்?
மகாத்மா காந்தி

28) முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்? பெனாசீர் புட்டோ

29) பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் - 1992

30) பெண் கொடுமை சட்டம் - 2002

31) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகதின் முதல் பெண் துணை அதிபர் யார்?  Louise Richardson Chidambaram

33) அண்டகச் சுரப்பி=பெண்

34) பிடித்த பெண் - இலக்கணக் குறிப்பு தருக.
பெயரெச்சம்

35) கல்மரம் நாவலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற பெண் எழுத்தாளர்
திலகவதி

36) அங்கு நிற்பது ஆணா? பெண்ணா? எவ்வகை வினா?
ஐய வினா

37) ஆள் - என்ன விகுதி? பெண்பால் வினைமுற்று

38) ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் ?  மெஹபூபா முஃப்தி

39) தேசிய பேரிடர் மீட்புப் படையின் முதல் பெண் கமாண்டர் ?
ரேகா நம்பியார்

40) இந்தியாவின் இரும்பு பெண் இந்திரா காந்தி.

41) பெண் என்ற நூலின் ஆசிரியர்? அகிலன்

42) பெண்ணின் பெருமை நூலின் ஆசிரியர்- திரு.வி.க

43) முதல்“அப்துல்கலாம் விருதைப்" பெற்ற ISRO பெண் இயக்குனர் யார்?  வளர்மதி

44) Radiological Society of North America (RSNA)வின் நிர்வாக குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண்? விஜய் M. ராவ்

45) பேயோட்டுவதற்க்ககான வெறியாடல் என்பதனைப் பற்றி பாடிய பெண் புலவர்? காமக்கண்ணியார்

46) சங்க காலத்தில் அதிக பாடல்களை பாடிய பெண் புலவர் யார்.? ஒளவையார்

47) சங்க கால பெண் புலவர்கள் எத்தனை.?  31

48) அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு

49) மலேரியா நோயைப் பரப்பும் பிளாஸ்மோடியத்தின் முக்கியக் கடத்தியாக செயல்படுவது – பெண் அனோபீலஸ் கொசு

50) சிற்றில்= 17ஆம் மாதத்திற்குரியதான இப்பருவத்தில் பெண் குழந்தைகள் வீடு கட்டி விளையாடும் சிற்றிலை ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும்.
(சிற்றில் = சிறு+வீடு)

51) 18 வயதிற்குட்பட்ட பெண் செய்யும் குற்றம் இளம் சிறார் குற்றமாகும்

52) தகாத முறையில் பெண்களை சித்தரிக்கும்(தடுப்பு) சட்டம் எப்போது இயற்றப்பட்டது? 1986

53) சிறந்த இலக்கியத்திற்காக, பிரிட்டன் வழங்கும் பரிசு. 1997 இல் அருந்ததிராய் எனும் இந்தியப் பெண் எழுத்தாளர் இவ்விருதைப் பெற்றார்.

54) ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம்-மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் பெயரால்தான் வழங்கப்பட்டு வருகின்றன.

55) பெண்ணுரிமைக்காகவே தனது வாழ்க்கையை செலவிட்டவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.

56) தமிழக முதல் பெண் முதலமைச்சர் திருமதி.ஜானகி ராமச்சந்திரன்(1988)

57) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்? பச்சேந்திரி பாய்

58) சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்

59) தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)

60) தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை

61) தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ்

62) தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS

63) தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண்

64) தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி

65) தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி

66) தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா சரண்

67) பாரத ஸ்டேட் வங்கியின் முதல் இந்திய பெண் தலைலராக 2013ல் நியமிகப்பட்டவர்? அருத்ததி பட்டசார்யா

68) இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்

69) சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை

70) எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? – மீனாட்சியம்மை குறம்

71) எந்த இந்திய தொழிலில் அதிக அளவிலான பெண்கள் பணிப்புரிகின்றனர்? டி(தேயிலை)

72)  கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் – பாரதிதாசன்

73) ஐ.நா உலகப்பெண்கள் மாநாடு நடைபெற்ற இடம் - பெல்ஜியம்

74) இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு

75) இந்தியாவில் முதல் பெண்கள் கல்லூரி 1879-ம் ஆண்டு நிறுவப்பட்டது. கோல்கத்தாவில் நிறுவப்பட்ட இக்கல்லூரியின் பெயர் - பேத்தூன்.

76) சாரதா சட்டத்துடன் தொடர்புடையது எது? குழந்தைத் திருமணம், ஆண் -18, பெண் - 16

77) மக்களவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ?
சுஷ்மா சுவராஜ்

78) தேசிய பெண்கள் ஆணையச்சட்டம்-1990

79) ஆண்கள் விட பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் :கேரளம்

80) பெண்களுக்கு செய்யும் குடும்ப கட்டுபாடு :டியூபக்டேமி

81) மொரிசியஸ் நாட்டின் முதல் பெண் பிரதமர்? அமீனா குரிப் பாகிம்

82) நன்னன் என்பவன் பெண் கொலை புரிந்த மன்னன்.

83) படித்த பெண் என்னும் திரைப்படத்திற்கு முதன்முதலாக பாடல் எழுதியவர்-பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்.

84) படித்தபெண்கள் எனும் நூலின் ஆசிரியர்? பாரதிதாசன்

85) மடவார் என்பது? பெண்கள்

86) சவுதி அரேபியாவில் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் முதன் முதலில் வெற்றி பெற்ற பெண் என்ற பெருமையை பெற்றவர்? சல்மா பின்ட் ஹிஸாப் அல்-ஒடீபி

87) பெரியாருக்கு பெரியார் பட்டம் வழங்கியவர்கள்? பெண்கள்

88) பாகிஸ்தானின், முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார்.

89) சிரியாவைச்சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் Zaina Erhaimக்கு Reporters Without Borders Prize என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது

90) 2015ம் ஆண்டின் சிறந்த மனிதராக, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் "டைம்' ஆங்கிலப் பத்திரிகை தேர்வு செய்துள்ளது.

91) சுமார் 30 ஆண்டுகளுக்கு பின், இந்த கௌரவத்தை பெறும் முதல் பெண் என்ற பெருமை மெர்க்கலாவுக்கு கிடைத்துள்ளது.

92) கடந்த 1986-ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக பிலிப்பின்ஸின் முதல் பெண் அதிபர் கோராஸன் அகினோவை, "டைம்' பத்திரிகை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது

93) தலைமை தேர்தல் ஆணையராக இருந்த பெண் யார்?ரமாதேவி

94) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? 15வது இடம்

95) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?
சென்னை (23,23,454)

96) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு? 71.54 ஆண்டுகள்

97) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பெண்கள் எவ்வளவு? 3,59,80,087

98) அன்யூப்ளாய்டி எ.கா-- டர்னர் சின்ரோம் ( பெண் அலி )

99) உலகின் முதல் பெண் பிரதமர்?பண்டார நாயகே - இலங்கை.

100) கடற்படை தலைவராக இருந்த ஆர்டிமீசியா என்ற பெண் எந்த நாட்டை சேர்ந்தவர்?
கிரேக்கம்.

Respect Women ♀.


No comments:

Post a Comment