லீலை கண்ணன் கதைகள்....... 10
யோகமாயை........
வசுதேவர் குழந்தையை மாற்றிவிட்டு மதுரா திரும்பினார்.தேவகியின் பக்கத்தில் இருந்த பெண் குழந்தை அழ ஆரம்பித்தது. குழந்தையின் குரல் கேட்டதும் காவலர்கள் கம்சனிடம் ஓடிச் சென்று "அரசே! தேவகிக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது. தங்களிடம் செய்தி சொல்லுவதற்காக நாங்கள் ஓடி வந்தோம்" என்று சொன்னார்கள். தூக்கம் வராமல் கம்சன் படுக்கையில் படுத்து புரண்டு கொண்டிருந்தான். அவனுக்குத் தூக்கம் போய் எத்தனையோ நாட்களாகிவிட்டன. தேவகியின் எட்டாவது குழந்தையைப் பற்றிய பயமே அவன் மனதை வாட்டிக் கொண்டிருந்தது. மன நிம்மதி இல்லாத அவனால் எப்படி தூங்க முடியும்? குழந்தை பிறந்துவிட்டது என்று கேள்விப்பட்டதும் பக்கத்தில் இருந்த ஒரு கத்தியைக் கையிலேந்தி அவன் சிறையை நோக்கி விரைந்தான்.
கருணையற்ற முகத்துடன் கம்சன் தன்னை நோக்கி வருவதைத் தேவகி பார்த்தாள். அவள் அவன் காலடியில் விழுந்து, "என் அருமை அண்ணா! இவள் உன் மருமகளுக்குச் சமம். இவளைக் கொல்லாதே. இவள் ஒரு பெண். ஒரு பெண்ணினால் உன்னை என்ன செய்ய முடியும்? இவள் பெண்ணாதலால், உன்னைப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் தீர்க்கதரிசன வார்த்தைகளை இவளால் நிறைவேற்ற முடியாது. தயவுசெய்து இவளை விட்டுவிடு. நீ என் எத்தனையோ குழந்தைகளைக் கொன்று விட்டாய். இந்த ஒரு பெண்ணையாவது எனக்கு விட்டு வை" என்று கெஞ்சினாள், கதறினாள். அழுதுகொண்டே அவள் அந்தக் குழந்தையைத் தன மார்போடு அனைத்துக் கொண்டாள். அவளுடைய கண்ணீர் அந்த குழந்தையின் உடலை நனைத்தது. ஆனால் அவள் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது ஒன்றும் கம்சன் காதில் விழவில்லை. ஏதோ வெறி பிடித்தவன் போல குழந்தையை அவளிடமிருந்து பறித்து, அதன் சின்னசிறு கால்களைப் பற்றிக் கொண்டு அதை ஒரு கல்லின் மீது அறையப் போனான். ஆனால் அந்த குழந்தையோ யோகமாயை! அதனால் அது அவன் கைகளிலிருந்து நழுவி, மேலே உயரச் சென்று, துர்க்காதேவி உருவில் காட்சியளித்தது. துர்க்கைக்கு எட்டுக் கைகள் இருந்தன. கைகளில் பலவித ஆயுதங்கள் காணப்பட்டன.
துர்க்கை கம்சனைப் பார்த்து, "அடே மடையா! எதற்காக வீணாக என்னைக் கொல்லப் பார்க்கிறாய்? உன்னைக் கொல்லுவதாக உள்ள குழந்தை ஏற்கனவே பிறந்து எங்கோ வளர்ந்து கொண்டிருக்கிறது. தேவையின்றி பச்சிளங் குழந்தைகளைக் கொல்லாதே. உன் உண்மையான எதிரியைத் தேடு" என்று சொல்லிவிட்டு மறைந்தாள். கம்சன் தூர்க்காதேவியின் பக்தன். துர்க்கை தன் எட்டுக் கைகளுடன் அவன் முன் தோன்றியது அவன் மனதை மாற்றியது.
தூர்காதேவியை ஈன்றுஎடுத்த தேவகி சாதாரணப் பெண்ணாக இருக்க முடியாது என்று நினைத்தான். தேவகிக்கும் வசுதேவருக்கும் தான் இழைத்த அக்கிரமங்களைக் குறித்து அவன் வருத்தப்பட்டான். உடனே, தன கைகளினாலேயே அவர்களுடைய கைகளில் பூட்டியிருந்த சங்கிலிகளையும் களைந்தான். மிக்க அடக்கத்துடன் அவர்களைப் பார்த்து, "என் அருமைச் சகோதரியே! என் சகோதரரே! உண்மையிலேயே நான் ஒரு பாவி. என்னுடைய கொடுஞ் செயல்களைக் குறித்து நான் பெரிதும் வருந்துகிறேன். குழந்தைகளைக் கொன்ற பாவத்தை நான் செய்துள்ளேன். எனக்கு என்ன நரகம் கிடைக்குமோ இரக்கமற்ற கொடுஞ் செயல்களைத் தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்" என்றான்.
கண்களில் கண்ணீர் வழிய அவன் தன் தங்கை காலிலும் அவளுடைய கணவர் காலிலும் விழுந்து மன்னிப்புக் கேட்டான். பெருந்தன்மை வாய்ந்த தேவகியும் வசுதேவரும் அவனை மன்னித்து அவன் அவர்களுக்கு இழைத்த கொடுமைகளை மறந்து வீடு திரும்பினர். அவர்களுடைய பெருந்தன்மையைப் பாராட்டிக் கொண்டே கம்சன் சற்று மன நிம்மதியுடன் தன் அரண்மனை திரும்பினான்.
இறை பணியில்
வாசு ஜி.

Kannanin leelaigal thoadaratum...
ReplyDelete