Wednesday, 30 March 2016

Krishna story 13

லீலை கண்ணன் கதைகள்.....13
வசுதேவரும் நந்தகோபரும் ......

சென்ற பதிவில் ரோகிணி, யசோதையின் குழந்தையால் கோகுலமே கொண்டாட்டமாக இருந்ததை பார்த்தோம் அதன் தொடர்ச்சி இந்த பதிவில்...
கம்சனுக்குக் கப்பம் கட்டுகிறவர்களில் ஒருவர் நந்தகோபர். ஒவ்வொரு வருடமும் அவர் கம்சனுக்குக் கப்பம் கட்டுவது வழக்கம். இந்த வருடம் கப்பம் கட்ட வேண்டிய நாள் நெருங்கிவிட்டதால் அவர் மதுரா சென்றார். நந்தகோபர் மதுரா வந்திருக்கிறார் என்று கேள்விபட்டதும் வசுதேவர் அவரைப் பார்க்க அவருடைய இருப்பிடத்திற்குச் சென்றார். நந்தகோபரும் வசுதேவரும் நெருங்கிய நண்பர்கள். நந்தகோபரைக் கண்டதும் வசுதேவர் அன்பு பொங்க அவரை இரு கரங்களாலும் தழுவிக் கொண்டார்.

இருவரும் அவரவர் நலன்களைப் பற்றி வெகு நேரம் விசாரித்தார்கள். தம்முடைய மனைவி ரோகிணிக்கும் அவளுக்குப் பிறந்த குழந்தைக்கும் கோகுலத்தில் இடம் கொடுத்ததற்காக வசுதேவர் நந்தகோபருக்கு நன்றி செலுத்தினார். கிருஷ்ணன் தம் குழந்தை என்று அறிவிக்காமல் அந்தக் குழந்தையின் நலனைப் பற்றி விசாரித்தார். கோகுலத்தைப் பற்றி எல்லா விஷயங்களையும் நந்தகோபர் சொல்ல, அதைக் கேட்டு வசுதேவர் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

ஆனால் கோகுலத்தில் எதாவது தகராறு நிகழும் என்று வசுதேவர் எதிர் பார்த்ததனால் விரைவாக ஊர் திரும்பும்படி நந்தகோபரைக் கேட்டுக்கொண்டார். நந்தகோபரும் வசுதேவரிடம் விடை பெற்றுக் கொண்டு, தமது நண்பர்களுடன் மாட்டு வண்டிகளில் தம் இருப்பிடமான கோகுலம் திரும்பினார். பயணத்தின் போது நந்தகோபர் கடவுளைத் தியானம் செய்து கொண்டே போனார். ஏதோ ஆபத்து இல்லாவிடில் வசுதேவர் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார் என்று அவர் நினைத்து கொண்டே போனார்.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்........

இறை பணியில்
வாசு ஜி.

No comments:

Post a Comment