Friday, 18 March 2016

Krishna story 11

லீலை கண்ணன் கதைகள்....... 11
கம்சனின் துர்ப்போதகர்கள்....

கம்சனுக்கு ஒரு பலவீனம் இருந்தது. நல்லவர்கள் மத்தியில் இருக்கும்போது அவன் மிகவும் நல்லவனாக நடந்துக் கொள்வான். ஆனால் அந்த நல்லவர்கள் அவனை விட்டு விலகியவுடன், அவனுடைய தீய குணம் அவனைப் பற்றிக் கொண்டுவிடும். அடுத்த நாள் காலை அவன் தன் அமைச்சர்களை அழைத்து சிறையில் நடந்த விபரீ தச் சம்பவங்களையும் துர்க்காதேவி அவனைப் பார்த்துச் சொன்னதையும் விவரித்தான். அவனுடைய அமைச்சர்கள் எல்லோரும் மனித உருவிலுள்ள அரக்கர்கள். அதனால் அவர்கள் இயல்பிலேயே தேவர்களை வெறுத்தனர்.

அதான் அவர்கள் கம்சனைப் பார்த்து, "உங்களுடைய எதிரி வேறு எங்கோ பிறந்து விட்டதாக நீங்கள் சொல்கிறீர்கள். அவ்வாறானால் அந்தக் குழந்தையை வெகு ஜாக்கிரதையாகப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அது மதுரா நகருக்கு அப்பால் வேறு ஏதாவது ஒரு நகரிலோ அல்லது கிராமத்திலோதான் இருக்க வேண்டும். ஒருவேளை ஆயவர்கள் வசிக்கும் இடங்களிலும் இருக்கலாம். அதனால் பத்து நாட்களுக்குள் பிறந்த எல்லாக் குழந்தைகளையும் நாம் கொல்ல ஆரம்பிக்க வேண்டும்.

"இன்னும் அந்தணர்கள் தேவர்களுக்கு வேண்டியவர்கள். அதனால் தேவர்கள் பூமிக்கு வந்தால் அந்தணர்களின் வீடுகளில்தான் ஒளிவார்கள். நாம் எல்லா அந்தணர்களையும் கொடுமைப்படுத்த வேண்டும்" என்று சொன்னார்கள். தன் நண்பர்களின் துர்ப்போதனையைக் கேட்டதுமே சற்று முன்புவரை தன்னிடம் இருந்த நல்ல குணத்தைக் கம்சன் இழந்தான். தன் ஆலோசகர்கள் கூறிய கொடுஞ் செயல்களுக்கு சம்மதித்தான்.

உடனேயே அந்த அரக்கர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் பச்சிளங் குழந்தைகளைக் கொன்றார்கள்; அந்தணர்களை கொடுமைப்படுத்தினார்கள். அவர்களுடைய தீய செயல்களுக்காக, மரணம் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தது என்பதை அவர்கள் அறியாதிருந்தார்கள்.

இறை பணியில்
வாசு ஜி.

No comments:

Post a Comment