லீலை கண்ணன் கதைகள்....... 12
கோகுலத்தில் கொண்டாட்டம்....
சென்ற பதிவில் கம்சன் மீண்டும் கொடுராமாக மாறியதை பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த பதிவு.
யசோதைக்கு யோகமாயை பெண்ணாகப் பிறந்த சமயம் கோகுலத்தில் இருந்த எல்லோருமே நினைவிழந்த நிலையில் இருந்தார்கள். அதனால் வசுதேவர் குழந்தைகளை மாற்றிக் கொண்டுபோனது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் ஆழ்ந்த நித்திரையில்ருந்து விழித்துக் கொண்டதும் யசோதைக்கு ஒரு மகன் பிறந்துள்ளான் என்கிற செய்தியை ஊரெங்கும் தெரிவித்தனர். யசோதையின் கணவரான நந்தகோபரோ கோகுலத்தின் தலைவர். அதனால் கோகுலமே குழந்தையை பார்க்க யசோதை வீட்டில் திரண்டது.
பிரபஞ்சத்தின் தலைவரான விஷ்ணு, அங்கே தமது தாயாரின் பக்கத்தில் ஒரு குழந்தையாகப் படுத்திருந்தார். சகல துன்பங்களும் விலக வேண்டும் என்பதற்காக அந்தணர்கள் புனித மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தார்கள். நந்தகோபர் எல்லோருக்கும் விலையுர்ந்த பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார். கோகுலம் முழுவதும் விழாகோலம் பூண்டது. சங்கீத வித்வான்கள் கீதங்கள் பாடினார்கள். தாள வாத்தியங்கள் முழுங்கின. வீதிகள் எல்லாம் அலங்கரிக்கப்பட்டு தெருக்களில் பன்னீர் தெளிக்கப்பட்டது.
அதே சமயத்தில், வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோகிணியும் ஒரு குழந்தையை ஈன்றேடுத்திருந்தாள். கம்சனின் கொடுமைக்குப் பயந்து அவள் கோகுலத்தில் ஒளிந்து கொண்டிருந்தாள். கோபிகளுக்கிடையில் யசோதையும் ரோகிணியும் தங்கள் பிள்ளைக் குழந்தைகளுடன் அரசியர்களைப் போல விளங்கினர். ரோகிணியின் மகன் சிவப்பாக இருந்தான். யசோதையின் மகன் கருப்பாக இருந்தான்.
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்..........
இறை பணியில்
வாசு ஜி.

Kannain leelaigal thoudarattum......
ReplyDelete