Thursday, 31 March 2016

Why Nivethyam for God...


நிவேதனம்


ஸ்வாமி நைவேத்யம் எதற்கு ………… !!
இவ்வளோ நாளா பூஜ செய்யறியே, ஒரு நாளாவது ஒரு பருக்கையாவது உங்க சாமி சாப்டாரா என்று கிண்டல் செய்பவர்களே …..
நைவேத்யம் என்பது கடவுளிடம் அறிவிப்பது …  காட்டுவது.
தேவதைகளுக்கு நம் போல் உண்ணத் தேவையில்லை.
பார்த்த மாத்திரத்திலேயே திருப்தி அடைகிறார்கள்.
மேலும் அந்த உணவில் இருக்கக்கூடிய தோஷங்களை அகற்றுகிறார்கள்.
இதற்காகவே ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்யப்படுகிறது.
தோஷங்கள் நீக்கப்பட்ட உணவே ஆரோக்யமான உணவு !!
இன்னும் விரிவாக காண்போம்……..
குருகுல வாசத்தில் குருவிடம் ‘ நாம் நிவேதிக்கும் பதார்த்தங்கள் ….
பகவான் ஏற்றுக் கொள்கிறானா..?
ஏற்றுக் கொண்டிருந்தால் அளவு சிறிதும் குறையாது அப்படியே இருக்கிறதே.?
இது எப்படி என கேட்கிறான்..? சீடன்
குரு சிறிது புன்னகைத்து விட்டு மெளனமாகிறார்…
சீடனுக்கு குருவையே மடக்கி விட்டோமென சந்தோஷம்…..!
  மாலை வகுப்பு தொடங்குகிறது.
எல்லோரும் சந்தையாய் ஒலிக்கிறார்கள்.
குரு சந்தேகம் கேட்ட சீடனை தனியே சொல்ல சொல்கிறார்.
அவனும் தெளிவாய் சொல்கிறான். மீண்டும், மீண்டும்  அவனை சொல்ல சொல்ல அவனும் தவறின்றி தெளிவாய் கூறுகிறான்.
இது எதிலிருந்த பாடம் என்கிறார் குரு…
இந்த சுவடியிலிருந்து இந்த பாடம் என கூறுகிறான்…
நீ இத்தனை முறை தெளிவாய் இதிலிருந்ததை எடுத்து ஒப்பு வித்திருக்கிறாய் ஆனால் அதிலுள்ள எழுத்துக்கள் அப்படியே தானே இருக்கிறது என்றார்….
சீடன் வெட்கி தலை குனிந்து குருவின் பாதம் பணிகிறான்…
இதிலுள்ள எழுத்தின் ஸ்வரத்தை நாம் எடுத்து கொள்வதை போல்,பகவானுக்கு ஸமர்பிக்கும் பதார்தத்தில் ஆவியை அவன் புசித்து அமுதத்தை அப்படியே நமக்கு திருப்பி தருகிறார் என விளக்கினார் குரு….
இறை பணியில்
வாசு ஜி.

Wednesday, 30 March 2016

Some of the Dont's prescribed in Sashtra..


செய்யக்கூடாத செயல்கள்


ஆண்கள் செய்யக்கூடாத செயல்கள்!
ஆண்மகன் தன் மனைவி கர்ப்பமாய் இருக்கும்போது, பிரேதத்தின் பின் போகுதல், முடிவெட்டுதல், மலை ஏறுதல், சமுத்திரத்தில் குளித்தல், வீடுகட்டுதல் தூரதேசயாத்திரை செல்லுதல், வீட்டில் விவாகம் செய்தல், சிரார்த்த வீட்டில் புசித்தல் ஆகிய இந்த எட்டுக் காரியங்களையும் செய்யக்கூடாது.
மேலும் கணவன் கர்ப்பிணியாய் இருக்கும் மனைவியை எந்த விதத்திலும் துன்புறுத்தவோ, அசிங்கமான வார்த்தை கூறவோ கூடாது. அப்பொழுதுதான் ஆரோக்கியமாய் சுகப்பிரசவமாகும்
நமது நடைமுறை வாழ்க்கையில் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன அவை
1. கன்றுக்குட்டி, மாடு ஆகிய இவற்றைக் கட்டியிருக்கும் கயிற்றைத் தாண்டக் கூடாது
2. தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்கக்கூடாது
3. நிலையில் அமரக்கூடாது
4. மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது
5. தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது
6. துணி இல்லாமல் குளிக்கக் கூடாது
7. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது
8. நெருப்பை வாயினால் ஊதக்கூடாது
9. அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது
10. துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷம் ஆகும்
11. ஆலயத்தில் இரவு நேரத்தில் குளிக்கக்கூடாது, கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம்.
12. ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது, உதறக்கூடாது
13. பெண்கள் மாதவிடாய் ஆன நான்கு நாள்கள்வரை, கோவிலுக்குப் போக்ககூடாது.
கூடாத சில விஷயங்கள்!
பசு தன் கன்றுக்குப் பால் கொடுக்கும் சமயத்திலும், தண்ணீர் குடிக்கும் சமயத்திலும் அதற்கு எவ்விதத் தடையும் ஏற்படுத்துதல் கூடாது! அது பாவங்களுளெல்லாம் பெரியபாவம் ஆகும்
மற்றும் அக்கினி, சூரியன், சந்திரன், வில்வமரம், பசு, தண்ணீர் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டு மல ஜலம் கழிக்கக்கூடாது!
மற்றும் பாம்புப்புற்றின் அருகிலும், எறும்புகள் கூட்டத்தின் மீதும் சிறுநீர் கழித்தல் கூடாது,
முக்கிய எச்ச்ரிக்கை! மாட்டை மேய்க்கும் கயிற்றைக் கட்டும் முளைக்குச்சியை எக்காரணம் கொண்டும் அடுப்பு எரிக்கக்கூடாது, அது மிகப்பெரிய தோஷமாகும்!
இறை பணியில்
வாசு ஜி.

Krishna story 13

லீலை கண்ணன் கதைகள்.....13
வசுதேவரும் நந்தகோபரும் ......

சென்ற பதிவில் ரோகிணி, யசோதையின் குழந்தையால் கோகுலமே கொண்டாட்டமாக இருந்ததை பார்த்தோம் அதன் தொடர்ச்சி இந்த பதிவில்...
கம்சனுக்குக் கப்பம் கட்டுகிறவர்களில் ஒருவர் நந்தகோபர். ஒவ்வொரு வருடமும் அவர் கம்சனுக்குக் கப்பம் கட்டுவது வழக்கம். இந்த வருடம் கப்பம் கட்ட வேண்டிய நாள் நெருங்கிவிட்டதால் அவர் மதுரா சென்றார். நந்தகோபர் மதுரா வந்திருக்கிறார் என்று கேள்விபட்டதும் வசுதேவர் அவரைப் பார்க்க அவருடைய இருப்பிடத்திற்குச் சென்றார். நந்தகோபரும் வசுதேவரும் நெருங்கிய நண்பர்கள். நந்தகோபரைக் கண்டதும் வசுதேவர் அன்பு பொங்க அவரை இரு கரங்களாலும் தழுவிக் கொண்டார்.

இருவரும் அவரவர் நலன்களைப் பற்றி வெகு நேரம் விசாரித்தார்கள். தம்முடைய மனைவி ரோகிணிக்கும் அவளுக்குப் பிறந்த குழந்தைக்கும் கோகுலத்தில் இடம் கொடுத்ததற்காக வசுதேவர் நந்தகோபருக்கு நன்றி செலுத்தினார். கிருஷ்ணன் தம் குழந்தை என்று அறிவிக்காமல் அந்தக் குழந்தையின் நலனைப் பற்றி விசாரித்தார். கோகுலத்தைப் பற்றி எல்லா விஷயங்களையும் நந்தகோபர் சொல்ல, அதைக் கேட்டு வசுதேவர் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

ஆனால் கோகுலத்தில் எதாவது தகராறு நிகழும் என்று வசுதேவர் எதிர் பார்த்ததனால் விரைவாக ஊர் திரும்பும்படி நந்தகோபரைக் கேட்டுக்கொண்டார். நந்தகோபரும் வசுதேவரிடம் விடை பெற்றுக் கொண்டு, தமது நண்பர்களுடன் மாட்டு வண்டிகளில் தம் இருப்பிடமான கோகுலம் திரும்பினார். பயணத்தின் போது நந்தகோபர் கடவுளைத் தியானம் செய்து கொண்டே போனார். ஏதோ ஆபத்து இல்லாவிடில் வசுதேவர் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார் என்று அவர் நினைத்து கொண்டே போனார்.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்........

இறை பணியில்
வாசு ஜி.

Monday, 28 March 2016

Gomatha smiles

ஒரு நாள் பசுவதை செய்யும் இடத்தில் ஒருவன் கோமாதாவை ஸம்ஹாரம் செய்வதற்கு வந்தவுடன் கோமாதா அவனை பார்த்து சிரித்தது.

அதை பார்த்து அவன் கேட்டான். நான் உன்னை ஸம்ஹாரம் செய்ய வந்துள்ளேன், அது தெரிந்தும் கூட நீ எதற்காக சிரிக்கின்றாய்? என்றுகேட்டான்.

அப்பொழுது கோமாதா சொன்னது. நான் எப்பொழுதும் மாமிசத்தை உண்டதில்லை. ஆனாலும் என் மரணம் மிகவும் கோரமாக இருக்கப் போகிறது.

எந்த தப்பும் செய்யாமல், யாருக்கும் எத்தகைய ஆபத்தையும் விளைவிக்காத என்னை, நீ கொன்று, என் மாமிசத்தை சாப்பிடும் உன் மரணம் எவ்வளவு கோரமாக இருக்குமோ என்று நினைத்து நான் சிரித்தேன்.

பால் கொடுத்து உங்களை வளர்த்தேன். உங்கள் பிள்ளைளுக்கு பால் கொடுக்கிறேன்.

ஆனால் நான் சாப்பிடுவது புல்லை மட்டுமே. பாலிலிருந்து வெண்ணை எடுத்தீர்கள். வெண்ணையினால் நெய்யை செய்தீர்கள்.

என்னுடைய சாணத்தினால் வறட்டி செய்துசமையலுக்கு உபயோகித்தீர்கள்.

அதே போல் என்னுடைய சாணத்தினால் எருவினை தயார் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தீனீர்கள்.

அந்த பணத்தினால் இன்பமான் வாழ்க்கையை வாழ்கிறீர்கள். ஆனால் எனக்கு மட்டும் அழுகிப் போன காய்றிளையும் காய்ந்து போன புல்லையும் தந்தீர்கள்.

என்னுடைய சாணத்தினால் கோபர் கேஸ் தயார் செய்து கொண்டு உங்கள் வீட்டை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தீர்கள்.

ஆனால் என்னை கசாப்புக்காரன் போல் கொல்ல வந்திருக்கிறாய்... என்னுடைய பாலிலிருந்து கிடைத்த சக்தியினால் தான் என்னை கொல்ல ஆயுதத்தை தூக்க முடிந்தது.

அந்த ஆயுதத்தை தூக்கும் சக்தி உனக்கு கிடைத்தது என்னால் தான்.

என் மூலம் நிறைய சம்பாதித்து வீட்டை கட்டிக் கொண்டாய். ஆனால் என்னை மட்டும் ஒரு குடிசையில் வைத்தாய்.

உன்னை பெற்ற தாயை விட மேலாக உனக்கு அண்டையாக இருந்தேன்.

ஸ்ரீக்ருஷ்ண பகவானிற்கு ப்ரீதியானவள் நான்.

எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கும் உன் கதி என்னவாகும்?

உன் வருங்காலத்தை குறித்து நினைத்து நான் சிரித்தேன் என்று சொன்னது.

(உஙக்ளால் முடிந்த அளவு எல்லோருக்கும் இதை தெரியப்படுத்தி கோமாதாவின் ருணத்தை (கடன்) தீர்க்கவும்).

இறை பணியில்
வாசு ஜி.

Saturday, 26 March 2016

One inch difference

image
ஒரு இஞ்ச் வித்தியாசம்.
காஞ்சிபுரத்தில், எண்ணியது நிறைவேறும்!  ப்ரஹ்மஸ்ரீ வேதபுரி மாமா, ஒருநாள் பெரியவாளிடம் கேட்டார்…..“பரமேஸ்வரன், அம்பாள், மஹாவிஷ்ணு, பிள்ளையார், முருகன்-ன்னு எல்லா தெய்வங்களும் இங்க…காஞ்சிபுரத்ல இருக்காடா! இதவிட, காஸிதான் விஸேஷம்-ன்னாலும் காஞ்சிபுரமும், அதுக்கு ஸமமான ஸ்தலம்! ஒனக்குத் தெரியுமோ?……..
…….இங்க, காஞ்சிபுரத்ல ஏழு கொளம் இருக்கு! இதுல….. தெனோமும் ஒரு கொளத்ல ஸ்நானம் பண்ணிட்டு, எல்லாக் கோவிலுக்கும் போயி ஸ்வாமி தர்ஸனம் பண்ணிட்டு, மனஸ்ல வேண்டிண்டா….. நெனச்ச கார்யம் கட்டாயமா நடக்கும்!….”
ஸீரியஸ்ஸாக பேசிக் கொண்டே வந்தவர், திடீரென்று ஒரு நமுட்டு சிரிப்போடு, தன் “குழந்தை சிஷ்யனைப் பார்த்து……
“காஸி-ங்கறதை பிரிச்சு சொல்லு பாக்கலாம்!…”
“கா……..ஸி…..!..”
“பேஷ்! காஞ்சி…..பிரிச்சு சொல்லு பாக்கலாம்”
“கா……ஞ்…….சி……”
“பாத்தியா? பாத்தியா? காஸிக்கும் காஞ்சிக்கும், ஒரு ‘ஞ்’ [inch] தாண்டா வித்யாஸம்!….”
அதிஸயித்தார் ஶசிஷ்யர்! என்ன அழகான ‘தங்க்லீஷ்’ ஸ்லேடை!
காஸியில் கபாலீஸ்வரனாய், காஞ்சியில் காமாக்ஷியாய் அருள்பாலிக்கும் நம் காஞ்சிநாதன், அத்வைதாச்சார்யனாகவும் இருப்பதால், நமக்கும் அவருக்கும் அணுவளவு inch கூட ஜீவ-ப்ரஹ்ம பேதம் இல்லாமல் அழித்து, தன்னுருவோடு சேர்த்துக் கொள்ள ப்ரார்த்தனை செய்வோம்.

Monday, 21 March 2016

Path of Dharma finally leads to..

மகாபாரதப் போர் முடிந்த பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காந்தாரி கொடுத்த சாபத்தின் விளைவாக யாதவர்களுக்குள் சண்டை நடந்து யாதவ குலம் முற்றிலும் அழிந்துபோனது. கிருஷ்ணரால் அதைத் தடுக்க முடியவில்லை. தனது அவதாரம் முடிவுக்கு வர வேண்டிய காலம் வந்துவிட்டதை அவர் உணர்ந்தார். அடர்ந்த புதர்கள் நிறைந்த ஒரு மரத்தடியில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஒரு வேடன் எய்த அம்பு அவர் பாதத்தில் நுழைந்து உயிரைக் குடித்தது.

யாதவர்களும் கிருஷ்ணனும் இறந்த செய்தி ஹஸ்தினாபுரத்தை எட்டியது. தங்களுக்கும் முடிவு காலம் வந்துவிட்டதை தருமன் உணர்ந்தான். உலக வாழ்வைத் துறந்து செல்லலாம் என்று நினைத்தான். அவரது தம்பிகளும் திரௌபதியும் இதை ஒப்புக்கொண்டார்கள். எல்லா உறவினர்களையும் இழந்த அவர்களுக்கு இனியும் உயிர் வாழப் பிடிக்கவில்லை. அதுவும் தங்களுக்கு ஆருயிர் நண்பனாக இருந்த கிருஷ்ணனின் மறைவு அவர்களை மிகவும் பாதித்துவிட்டது.

அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவின் மகன் பரீட்சித்துக்குப் பட்டம் சூட்டிவிட்டுப் பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் நாட்டை விட்டுக் கிளம்பினார்கள். வடக்கில் இமயமலைக்கு அப்பால் இருக்கும் மேரு மலையை நோக்கிச் சென்றார்கள். உலக இன்பங்களையும் ஆசைகளையும் பந்த பாசங்களையும் அறவே துறந்து மேருமலையைக் கடப்பவர்கள் மனித உடலுடன் சொர்க்கத்துக்குச் செல்ல முடியும் எனச் சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய பயணத்துக்குத் தேவையான மனநிலையுடன் பாண்டவர்கள் துறவறம் பூண்டார்கள். மரவுரி தரித்துக்கொண்டு புறப்பட்டார்கள். அரச பதவியையும் அரண்மனைச் சுகங்களையும் துறந்து வாழ்க்கையின் மீதான ஆசையை விடுத்து, மோட்சம் நாடிச் சென்றார்கள்.

லட்சக்கணக்கான வீரர்களின் இறுதி யாத்திரையைத் தீர்மானித்த அந்த வீரர்கள் தங்களது இறுதி யாத்திரையைத் தாங்களே முடிவுசெய்தபடி கிளம்பினார்கள். அவர்களுடன் தருமபுத்திரன் வளர்த்துவந்த நாயும் உடன் சென்றது.

பின்தொடர்ந்த நாய்

மேரு மலைக்கு யாத்திரை செல்பவர்கள் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பது நியதி. தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராகச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து நாயும் சென்றது.

பாண்டவர்கள் பல நாட்கள் பயணம்செய்து இமயமலையை அடைந்தார்கள். அதைக் கடந்து சென்று மேரு மலையைத் தரிசித்தனர். மேரு மலையில் பயணம் சென்றபோது திரௌபதி சோர்ந்து விழுந்து இறந்து விட்டாள்.

அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பீமன், “திரௌபதி ஏன் வீழ்ந்துவிட்டாள்?” எனத் தன் அண்ணனிடம் கேட்டான். தருமன் திரும்பிப் பார்க்காமல் பதில் சொன்னான்: “ஐவரிடமும் சமமான அன்பு வைக்க வேண்டியவள், அர்ச்சுனனிடம் கூடுதல் அன்பைக் காட்டினாள். அதனால்தான் அவளால் இந்தப் பயணத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.”

சிறிது நேரத்தில் சகாதேவன் மயங்கி வீழ்ந்தான் “சகாதேவன் ஏன் விழுந்தான்? என்று கேட்டான் பீமன். “தன்னிடம் உள்ள சாஸ்திர அறிவு வேறு யாரிடமும் இல்லை என்ற கர்வம்தான் காரணம்” என்றபடியே தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டிருந்தான்.

அர்ச்சுனன் வீழ்ந்தான்

சிறிது நேரத்தில் நகுலன் சாய்ந்தான். பீமன் மீண்டும் காரணம் கேட்டான். தன்னை மிஞ்சிய அழகன் யாருமில்லை என்ற கர்வம்தான் காரணம் என்றான் தருமன். இப்போதும் திரும்பிப் பார்க்கவில்லை.

அடுத்து அர்ச்சுனன் விழுந்தான். “தனது வில்லாண்மை குறித்த கர்வம்தான் அவனை இந்தப் பயணத்தில் வீழ்த்தியது” என்றவாறு தருமன் போய்க்கொண்டிருந்தான்.

தனக்கும் தலை சுற்றுவதை பீமன் உணர்ந்தான். தள்ளாடி விழும் சமயத்தில் “என்னால் ஏன் தொடர்ந்து வர முடியவில்லை?” என்று கேட்டான். “உன்னைவிட பலமுள்ளவர்கள் யாருமில்லை என்னும் கர்வம்” என்று தருமன் சொல்லி முடிப்பதற்குள் பீமன் தன் கடைசி மூச்சை விட்டான்.

ஆசாபாசங்களையும் உலகியல் உணர்ச்சிகளையும் அறவே துறந்த தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தான். நாய் மட்டும் அவனைத் தொடர்ந்தது.

மேரு மலையின் உச்சியை அடைந்தான். அப்போது அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லத் தேவேந்திரனே விமானத்துடன் வந்தான். தருமன் விமானத்தில் ஏற முற்பட்டபோது அவனுடன் வந்த நாயும் ஏற முயன்றது. “நாய்க்குச் சொர்க்கத்தில் இடமில்லை” என்று கூறித் தடுத்தான் இந்திரன்.

விமானத்தினுள் வைத்த காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டான் தருமன். “என்னை நம்பி இத்தனை தூரம் வந்த நாயை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி வர முடியும்? நான் இங்கேயே இருந்துவிடுகிறேன்” என்றான்.

அப்போது நாய் மறைந்தது. அங்கே தரும தேவன் நின்றார். “சொர்க்கமே கிடைக்கிறது என்றாலும் உன்னை நம்பி வந்த நாயைக்கூடக் கைவிடாத உன் குணத்தைப் பாராட்டுகிறேன். எத்தகைய சூழ்நிலையிலும் தரும நெறியிலிருந்து நீ பிறழவில்லை. இது நான் உனக்கு வைத்த சோதனை. முன்பு யட்சன் வடிவில் வந்து உன்னைச் சோதித்தேன். இப்போது நாய் வடிவில் வந்து சோதித்தேன். இந்தச் சோதனைகளில் நீ தேறிவிட்டாய். மகிழ்ச்சியோடு சொர்க்கத்துக்குச் செல்” என்று கூறி தரும தேவன் மறைந்தார்.

இறை பணியில்
வாசு ஜி.

Saturday, 19 March 2016

Benefits of doing Karma

கர்மாவுக்குண்டான பலன்...!!! -மஹா பெரியவா

செகந்தராபாதில் பெரியவா முகாம். அப்போது ரயில்வேயில் மூத்த அதிகாரிகள் சிலபேர் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தனர். அவர்களுக்கு ஒரு பெரிய குறை.........

"பெரியவாளோட அனுக்ரகத்தால எங்களோட கர்மானுஷ்டானங்களை எல்லாம் கூடியவரைக்கும் விடாமப் பண்ணிண்டு இருக்கோம். ஆனா.........இந்த ஊர்ல, பூஜை, ஸ்ராத்தம், தர்ப்பணம் இதெல்லாத்தையும் சரியாப் பண்ணிவெக்க, வேதம் படிச்ச சாஸ்த்ரிகள் இல்லே! ஒரே ஒர்த்தர்தான் இருந்தார்.......அவருக்கும் பண்ணி வெக்கும்போது அவர் சொல்ற மந்த்ரங்களுக்கு அவருக்கே அர்த்தம் தெரியலை........அர்த்தம் தெரியாம கர்மாக்களை பண்றதை, எங்காத்து பிள்ளைகள் ஏத்துக்க மாட்டேங்கறா........இந்தக் காலத்து பசங்களாச்சே! அதான்......பெரியவா தயவுபண்ணி மடத்துலேர்ந்து யாராவது வேதம் படிச்ச சாஸ்த்ரிகளா பாத்து இந்த ஊருக்கு அனுப்பிச்சுக் குடுக்கணும்" என்று ப்ரார் த்தனை பண்ணினார்கள்.
...
"ஒங்காத்து பிள்ளைகள் சொல்றதுலேயும் ஞாயம் இருக்கு.........." என்று அவர் ஆரம்பித்தபோது, ஸ்ரீமடத்துக்கான அன்றைய தபால்களை எடுத்துக் கொண்டு ஒரு postman வந்தார். பெரியவா மேலாக சில கடிதங்களைப் படித்துவிட்டு, ஒரு லெட்டரை எடுத்தார். அதில் PIN என்று இருந்த இடத்தை அந்த அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டி, "PIN ..ன்னு போட்டிருக்கே.....அதோட அர்த்தம் தெரியுமா?"

ரொம்ப சாதாரண கேள்விதான். ஆனால் அந்த அதிகாரிகளுக்கு தெரியவில்லை. கொண்டுவந்த தபால்காரருக்கும் தெரியவில்லை.

"POSTAL INDEX NUMBER " என்று தானே அதற்கு விளக்கமும் குடுத்தார். சிரித்துக்கொண்டே அந்த அதிகாரிகளைப் பார்த்து " நீங்கள்ளாம் நெறைய படிச்சு பெரிய உத்தியோகம் பாக்கறவா.........ஆனா, சாதாரண தபால்ல வர PIN க்கு ஒங்களுக்கு அர்த்தம் தெரியலே........அவ்வளவு ஏன்? PINCODE ன்னு எதையோ எழுதின அந்த ஆஸாமிக்கே கூட அதோட அர்த்தம் தெரியாம இருக்கலாம். ஆனா..........PINCODE ன்னு போட்டிருக்கற எடத்ல சரியான நம்பரை எழுதிட்டா........அது சரியா போய்சேர வேண்டிய எடத்துக்கு போறா மாதிரி.........பண்ணி வெக்கற வாத்யாருக்கு மந்த்ரங்களோட அர்த்தம் தெரியாட்டாலும், பண்ணிக்கற ஒங்களுக்கெல்லாம் அர்த்தம் புரியாட்டாலும், எந்த கர்மாவுக்கு எந்த மந்த்ரம் சொல்லணுமோ....அதை செரியா சொன்னா, அதுக்குண்டான பலனை அது குடுக்கும்! அதுல ஒங்களுக்கு எந்த விதமான சந்தேஹமும் வேணாம். அதுனால, இப்போ இருக்கற ப்ரோஹிதரை நிறுத்தாம, நீங்க பண்ண வேண்டிய கர்மாக்களை ஸ்ரத்தையோட பண்ணிண்டு வாங்கோ! ஒரு கொறைவும் வராது!" கையைத் தூக்கி ஆசிர்வதித்தார்.

..அதிகாரிகள் விக்கித்துப் போனார்கள்! ஒரு சாதாரண, அன்றாடம் கவனத்தில் கூட வராத PIN னை வைத்தே, எப்பேர்பட்ட பெரிய சந்தேஹத்தை போக்கி விட்டார்.......

இறை பணியில்
வாசு ஜி.

Krishna story 12

லீலை கண்ணன் கதைகள்....... 12
கோகுலத்தில் கொண்டாட்டம்....

சென்ற பதிவில் கம்சன் மீண்டும் கொடுராமாக மாறியதை பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த பதிவு.

யசோதைக்கு யோகமாயை பெண்ணாகப் பிறந்த சமயம் கோகுலத்தில் இருந்த எல்லோருமே நினைவிழந்த நிலையில் இருந்தார்கள். அதனால் வசுதேவர் குழந்தைகளை மாற்றிக் கொண்டுபோனது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் ஆழ்ந்த நித்திரையில்ருந்து விழித்துக் கொண்டதும் யசோதைக்கு ஒரு மகன் பிறந்துள்ளான் என்கிற செய்தியை ஊரெங்கும் தெரிவித்தனர். யசோதையின் கணவரான நந்தகோபரோ கோகுலத்தின் தலைவர். அதனால் கோகுலமே குழந்தையை பார்க்க யசோதை வீட்டில் திரண்டது.

பிரபஞ்சத்தின் தலைவரான விஷ்ணு, அங்கே தமது தாயாரின் பக்கத்தில் ஒரு குழந்தையாகப் படுத்திருந்தார். சகல துன்பங்களும் விலக வேண்டும் என்பதற்காக அந்தணர்கள் புனித மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தார்கள். நந்தகோபர்  எல்லோருக்கும் விலையுர்ந்த பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார். கோகுலம் முழுவதும் விழாகோலம் பூண்டது. சங்கீத வித்வான்கள் கீதங்கள் பாடினார்கள். தாள வாத்தியங்கள் முழுங்கின. வீதிகள் எல்லாம் அலங்கரிக்கப்பட்டு தெருக்களில் பன்னீர் தெளிக்கப்பட்டது.

அதே சமயத்தில், வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோகிணியும் ஒரு குழந்தையை ஈன்றேடுத்திருந்தாள். கம்சனின் கொடுமைக்குப் பயந்து அவள் கோகுலத்தில் ஒளிந்து கொண்டிருந்தாள். கோபிகளுக்கிடையில் யசோதையும் ரோகிணியும் தங்கள் பிள்ளைக் குழந்தைகளுடன் அரசியர்களைப் போல விளங்கினர். ரோகிணியின் மகன் சிவப்பாக இருந்தான். யசோதையின் மகன் கருப்பாக இருந்தான்.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்..........

இறை பணியில்
வாசு ஜி.

Friday, 18 March 2016

Krishna story 11

லீலை கண்ணன் கதைகள்....... 11
கம்சனின் துர்ப்போதகர்கள்....

கம்சனுக்கு ஒரு பலவீனம் இருந்தது. நல்லவர்கள் மத்தியில் இருக்கும்போது அவன் மிகவும் நல்லவனாக நடந்துக் கொள்வான். ஆனால் அந்த நல்லவர்கள் அவனை விட்டு விலகியவுடன், அவனுடைய தீய குணம் அவனைப் பற்றிக் கொண்டுவிடும். அடுத்த நாள் காலை அவன் தன் அமைச்சர்களை அழைத்து சிறையில் நடந்த விபரீ தச் சம்பவங்களையும் துர்க்காதேவி அவனைப் பார்த்துச் சொன்னதையும் விவரித்தான். அவனுடைய அமைச்சர்கள் எல்லோரும் மனித உருவிலுள்ள அரக்கர்கள். அதனால் அவர்கள் இயல்பிலேயே தேவர்களை வெறுத்தனர்.

அதான் அவர்கள் கம்சனைப் பார்த்து, "உங்களுடைய எதிரி வேறு எங்கோ பிறந்து விட்டதாக நீங்கள் சொல்கிறீர்கள். அவ்வாறானால் அந்தக் குழந்தையை வெகு ஜாக்கிரதையாகப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அது மதுரா நகருக்கு அப்பால் வேறு ஏதாவது ஒரு நகரிலோ அல்லது கிராமத்திலோதான் இருக்க வேண்டும். ஒருவேளை ஆயவர்கள் வசிக்கும் இடங்களிலும் இருக்கலாம். அதனால் பத்து நாட்களுக்குள் பிறந்த எல்லாக் குழந்தைகளையும் நாம் கொல்ல ஆரம்பிக்க வேண்டும்.

"இன்னும் அந்தணர்கள் தேவர்களுக்கு வேண்டியவர்கள். அதனால் தேவர்கள் பூமிக்கு வந்தால் அந்தணர்களின் வீடுகளில்தான் ஒளிவார்கள். நாம் எல்லா அந்தணர்களையும் கொடுமைப்படுத்த வேண்டும்" என்று சொன்னார்கள். தன் நண்பர்களின் துர்ப்போதனையைக் கேட்டதுமே சற்று முன்புவரை தன்னிடம் இருந்த நல்ல குணத்தைக் கம்சன் இழந்தான். தன் ஆலோசகர்கள் கூறிய கொடுஞ் செயல்களுக்கு சம்மதித்தான்.

உடனேயே அந்த அரக்கர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் பச்சிளங் குழந்தைகளைக் கொன்றார்கள்; அந்தணர்களை கொடுமைப்படுத்தினார்கள். அவர்களுடைய தீய செயல்களுக்காக, மரணம் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தது என்பதை அவர்கள் அறியாதிருந்தார்கள்.

இறை பணியில்
வாசு ஜி.

Some ways to bring home The Lakshmi kadaksham..


பணம் வர தாந்திரிக ரகசியங்கள்

FEATURED


வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும். வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பித்ருக்களை மட்டும் வழிபட பணம் வரும்.
வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. பணம் ஓடிவிடும்.
பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசி பெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும்.
அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும்.
யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசை தான்.
பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்து பின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்கு அளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடை நீங்கும்.
வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.
பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.
தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும். குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்.
இறை பணியில்
வாசு ஜி.

Wednesday, 16 March 2016

Krishna story 10

லீலை கண்ணன் கதைகள்....... 10
யோகமாயை........

வசுதேவர் குழந்தையை மாற்றிவிட்டு மதுரா திரும்பினார்.தேவகியின் பக்கத்தில் இருந்த பெண் குழந்தை அழ ஆரம்பித்தது. குழந்தையின் குரல் கேட்டதும் காவலர்கள் கம்சனிடம் ஓடிச் சென்று "அரசே! தேவகிக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது. தங்களிடம் செய்தி  சொல்லுவதற்காக நாங்கள் ஓடி வந்தோம்" என்று சொன்னார்கள். தூக்கம் வராமல் கம்சன் படுக்கையில் படுத்து புரண்டு கொண்டிருந்தான். அவனுக்குத் தூக்கம் போய் எத்தனையோ நாட்களாகிவிட்டன. தேவகியின் எட்டாவது குழந்தையைப் பற்றிய பயமே அவன் மனதை வாட்டிக் கொண்டிருந்தது. மன நிம்மதி இல்லாத அவனால் எப்படி தூங்க முடியும்? குழந்தை பிறந்துவிட்டது என்று கேள்விப்பட்டதும் பக்கத்தில் இருந்த ஒரு கத்தியைக் கையிலேந்தி அவன் சிறையை நோக்கி விரைந்தான்.

கருணையற்ற முகத்துடன் கம்சன் தன்னை நோக்கி வருவதைத் தேவகி பார்த்தாள். அவள் அவன் காலடியில் விழுந்து, "என் அருமை அண்ணா! இவள் உன் மருமகளுக்குச்  சமம். இவளைக் கொல்லாதே. இவள் ஒரு பெண். ஒரு பெண்ணினால் உன்னை என்ன செய்ய முடியும்? இவள் பெண்ணாதலால், உன்னைப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் தீர்க்கதரிசன வார்த்தைகளை இவளால் நிறைவேற்ற முடியாது. தயவுசெய்து இவளை விட்டுவிடு. நீ என் எத்தனையோ குழந்தைகளைக் கொன்று விட்டாய். இந்த ஒரு பெண்ணையாவது எனக்கு விட்டு வை" என்று கெஞ்சினாள், கதறினாள். அழுதுகொண்டே அவள் அந்தக் குழந்தையைத் தன மார்போடு அனைத்துக் கொண்டாள். அவளுடைய கண்ணீர் அந்த குழந்தையின் உடலை நனைத்தது. ஆனால் அவள் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது ஒன்றும் கம்சன் காதில் விழவில்லை. ஏதோ வெறி பிடித்தவன் போல குழந்தையை அவளிடமிருந்து பறித்து, அதன் சின்னசிறு கால்களைப் பற்றிக் கொண்டு அதை ஒரு கல்லின் மீது அறையப் போனான். ஆனால் அந்த குழந்தையோ யோகமாயை! அதனால் அது அவன் கைகளிலிருந்து நழுவி, மேலே உயரச் சென்று, துர்க்காதேவி உருவில்  காட்சியளித்தது. துர்க்கைக்கு எட்டுக் கைகள் இருந்தன. கைகளில் பலவித ஆயுதங்கள் காணப்பட்டன.

துர்க்கை கம்சனைப் பார்த்து, "அடே மடையா! எதற்காக வீணாக என்னைக் கொல்லப் பார்க்கிறாய்? உன்னைக் கொல்லுவதாக உள்ள குழந்தை ஏற்கனவே பிறந்து எங்கோ வளர்ந்து கொண்டிருக்கிறது. தேவையின்றி பச்சிளங் குழந்தைகளைக் கொல்லாதே. உன் உண்மையான எதிரியைத் தேடு" என்று சொல்லிவிட்டு மறைந்தாள். கம்சன் தூர்க்காதேவியின் பக்தன். துர்க்கை தன் எட்டுக் கைகளுடன் அவன் முன் தோன்றியது அவன் மனதை மாற்றியது.

தூர்காதேவியை ஈன்றுஎடுத்த  தேவகி சாதாரணப் பெண்ணாக இருக்க முடியாது என்று நினைத்தான். தேவகிக்கும் வசுதேவருக்கும் தான் இழைத்த  அக்கிரமங்களைக் குறித்து அவன் வருத்தப்பட்டான். உடனே, தன கைகளினாலேயே அவர்களுடைய கைகளில் பூட்டியிருந்த சங்கிலிகளையும் களைந்தான். மிக்க அடக்கத்துடன் அவர்களைப் பார்த்து, "என் அருமைச் சகோதரியே! என் சகோதரரே! உண்மையிலேயே நான் ஒரு பாவி. என்னுடைய கொடுஞ் செயல்களைக் குறித்து நான் பெரிதும் வருந்துகிறேன். குழந்தைகளைக் கொன்ற பாவத்தை நான் செய்துள்ளேன். எனக்கு என்ன நரகம் கிடைக்குமோ இரக்கமற்ற கொடுஞ் செயல்களைத் தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்" என்றான்.

கண்களில் கண்ணீர் வழிய அவன் தன் தங்கை காலிலும் அவளுடைய கணவர் காலிலும் விழுந்து மன்னிப்புக் கேட்டான். பெருந்தன்மை வாய்ந்த தேவகியும் வசுதேவரும் அவனை மன்னித்து அவன் அவர்களுக்கு இழைத்த கொடுமைகளை மறந்து வீடு திரும்பினர். அவர்களுடைய பெருந்தன்மையைப் பாராட்டிக் கொண்டே கம்சன் சற்று மன நிம்மதியுடன் தன் அரண்மனை திரும்பினான்.

இறை பணியில்
வாசு ஜி.

Service of Lakshmana to Lord Rama

ராமாவதாரம் முடிய மூன்று நாள் தான் இருந்தது. அவரை ரகசியமாக சந்தித்துப் பேச எமன் வந்திருந்தான். அப்போது ராமர் லட்சுமணரை அழைத்து, நாங்கள் பேசும் சமயத்தில் யாரையும் அனுமதிக்க வேண்டாம், என்று கட்டளையிட்டார். அந்த சமயத்தில் கோபக்காரரான துர்வாச மகரிஷி ராமரைத் தரிசிக்க வந்திருந்தார். லட்சுமணர் துர்வாசரை உள்ளே அனுமதிக்க மறுத்தார். கோபம் கொண்ட  மகரிஷி, என்னை அனுமதிக்காவிட்டால் அயோத்தியே அழிந்து போக சபித்து விடுவேன், என்று கூச்சலிட்டார்.

அயோத்திக்கு ஆபத்து நேருமே என்ற பயத்தில் லட்சுமணரும் மகரிஷிக்கு வழிவிட்டார். ஆனால் கட்டளையை மீறிய தம்பி லட்சுமணர் மீது ராமருக்கு கோபம் எழுந்தது. நீ மரமாகப் போ என்று சபித்தார். அதைக் கேட்டதும் லட்சுமணர் கண்ணீருடன்,அண்ணா.... தங்களின் சாபத்தை எண்ணி நான் வருந்தவில்லை. தங்களுக்கு சேவை செய்யாமல் எப்படி வாழ்வேன்? என்றார். லட்சுமணா! எல்லாம் விதிப்படியே நடக்கிறது. சீதையை காட்டுக்கு அனுப்பிய பாவத்திற்காக நானும் பூலோகத்தில் 16 ஆண்டு அசைவின்றி தவ வாழ்வில் ஈடுபட வேண்டியிருக்கிறது. மரமாக மாறும் நீயே எனக்கு நிழல் தரும் பேறு பெறுவாய், என்றார். அதன்படியே, திருச்செந்துõர் அருகிலுள்ள ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாராக ராமர் அவதரித்த போது, லட்சுமணர் புளியமரமாக நின்று சேவை செய்தார். இந்த மரத்தை துõங்காப்புளி என்பர். அதாவது, இதன் இலைகள் எப்போதும் மூடுவதே இல்லை. லட்சுமணன் கண் இமைக்காமல் ராமரைப் பாதுகாப்பதாக ஐதீகம்.

இறை பணியில்
வாசு ஜி.

Tuesday, 15 March 2016

Mahaperiyavalai parkanum

பெரியவாளப் பாக்கணும்…

image
 பெரியவாளப் பாக்கணும்……
இது மனஸை நெகிழவைக்கும் பேரருள்……
பெரியவா ஸாதாரணமாக ரொம்ப கூட்டம் இல்லாவிட்டால் கூட, இரவு பத்து மணியானாலும் பக்தர்களின் குறைகளை கேட்டு உபாயமோ ஆறுதலோ சொல்லுவது வழக்கம். ஒருநாள் எல்லாரும் போனதும், பெரியவா ஸயனிக்க உள்ளே போனார். எனவே பாரிஷதர்கள் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது…….
“நா…. பெரியவாளை தர்ஶனம் பண்ணணும்”
யாரென்று பார்த்தால்…… ஒரு 12 வயஸ் பையன் மிகவும் பரிதாபமான கோலத்தில் நின்று கொண்டிருந்தான்.
“இப்போல்லாம் பெரியவாளை பாக்க முடியாது…….. ஸாப்டுட்டு ஒரு பக்கமா இங்கியே படுத்துக்கோ…. காலேல தர்ஶனம் பண்ணு”
பாரிஷதர் சொன்னார்.
இப்படி ஒரு பரிதாபமான கோலத்தில் ஒரு பையன் வந்திருக்கிறான் என்று பெரியவாளை எழுப்ப முடியாதே!
சிறுவன் விடுவதாயில்லை!
“எனக்கு இப்போ பசிக்கல… பெரியவாளை மட்டும் எப்டியாவது தர்ஶனம் பண்ணணும் அண்ணா…”
மிகவும் களைத்துப்போய் இருந்ததால், ஒரு பக்கமாக படுத்துக் கொண்டுவிட்டான். பாவம்!
12 வயஸுக்குள், 80 வயஸு கண்டவர்களின் கஷ்டங்கள் அத்தனையும் பட்டுவிட்டான் என்பதாலோ என்னவோ, தன் ஸாமீப்யத்திலேயே அவனை அன்று தூங்க வைத்தார்! 
மறுநாள் காலை பெரியவா…. சிறுவனை தன்னிடம் அழைத்தார்.
“ஏம்பா…. எங்கேர்ந்து வரே? ஓம்பேரென்ன? ஒங்கப்பா அம்மா யாரு? எங்கயிருக்கா?……..”
ஸ்ரீ மாதாவின் குரலை, அந்த கன்று இனம் கண்டுகொண்டு விட்டது! கண்களில் நீர் பெருக அந்த குழந்தைப் பையன் சொன்னான்……….
“பெரியவா….. நா… மெட்ராஸ்ல ஒரு ஸ்கூல்ல படிச்சிண்டிருக்கேன்.. எங்கப்பா, அம்மா, தங்கை மூணுபேரும் வெளியூர்ல இருந்தா…. அப்பா திடீர்னு செத்துப் போய்ட்டார்! அம்மாவும் தங்கையும் ரொம்ப கஷ்டப்பட்டா… பாவம்! அப்றம் பம்பாய்ல ஒரு பெரிய பணக்கார மாமாவாத்ல ஸமையல் வேலை பண்ணிண்டு இருந்தா…..
சிறுவன் மேலே பேச முடியாமல் விம்மினான்….
…….திடீர்னு எங்கம்மாவும் செத்துப் போய்ட்டா பெரியவா……..!”
இதற்கு மேல் குழந்தையால் தொடர முடியாமால், விக்கி விக்கி அழ ஆரம்பித்தான்.
“……அப்பா அம்மா ரெண்டுபேரையுமே என்னால கடேஸி வரைக்கும் பாக்க முடியல பெரியவா! அவாளுக்கு கார்யம் பண்ணக்கூட என்னால முடியாது! எனக்கு இன்னும் பூணூல் போடலங்கறதால, கார்யம் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டா…! எனக்கு ரொம்ப அழுகை அழுகையா வருது பெரியவா…..!
சுற்றி இருந்தவர்கள் கண்களும் நீரைப் பெருக்கின….
“……இப்போ அந்த பம்பாய்ல இருக்கற மாமா வேற, “ஒன்னோட தங்கையை வந்து அழைச்சிண்டு போ!” ன்னு எப்போப்பாத்தாலும் ஆள் விட்டுண்டே இருக்கார்……பெரியவா. நானே கவர்ன்மென்ட் ஸ்கூல் ஹாஸ்டல்ல இருக்கேன். என்னோட அப்பா அம்மாக்கு கர்மாக்களைப் பண்ணணும், என் தங்கையை நன்னா வெச்சுக்கணும்..ன்னு எனக்கும் ரொம்ப ஆசையாத்தான் இருக்கு பெரியவா. ஆனா… நானே சோத்துக்கு வழி இல்லாம இருக்கேனே!அதான்…..ஒங்களை தர்ஶனம் பண்ணினா… எனக்கு வழி சொல்லுவேள்னு மடத்துக்கு வந்துட்டேன்…..பெரியவா...”
அழுகையோடு தட்டுத் தடுமாறி சொன்னான். அவனையே சில வினாடிகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் சொல்லித்தானா அவருக்கு தெரியவேண்டும்? அவனைக் காப்பாற்றத்தானே இங்கே தன்னிடம் வரவழைத்திருக்கிறார்!
“ஸெரிடா…. கொழந்த! நீ… கொஞ்ச நாள் இங்கியே இரு. என்ன?”
“ஸரி” என்று ஸந்தோஷமாக தலையாட்டியது அந்த குழந்தை.
நாலைந்து நாட்களுக்குப் பிறகு, நெய்வேலியிலிருந்து சில உயர் அதிகாரிகள், பெரியவா தர்ஶனத்துக்கு வந்தார்கள். அவர்கள் வெளியே சென்றதும்,எதேச்சையாக!! அந்த பையன் அந்தப் பக்கம் வரவும், பெரியவா அவனிடம்……
” சட்னு போய், அந்த நெய்வேலிலேர்ந்து வந்தவாள்ளாம்… போய்ட்டாளான்னு பாரு! போகலேன்னா, நா… கூப்டேன்னு சொல்லி கூட்டிண்டு வா! “……….
அவருடைய திருவிளையாடலை யாரறிவார்?
பெரியவா ஸங்கல்பம்….. ! அவர்கள் கிளம்பவில்லை!
ஒவ்வொருவராக பெரியவா முன்னால் வர வர, “நீ இல்ல, நீ இல்ல” என்று திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்.
கடைஸியாக வந்தவரைப் பார்த்ததும், பெரியவா முகத்தில் ஒரு புன்சிரிப்பு.
“ம்ம்ம்ம்..இவரத்தான் கூப்ட்டேன். இந்தாடா! கொழந்த! ஒன்னோட கதையை இவர்கிட்ட சொல்லு”
பையன் சொல்ல சொல்ல அதிகாரியின் முகத்தில் ஒரே ப்ரகாஶம்!
“பெரியவா…….! என்னோட அக்கா… பம்பாய்ல இருக்கா! அவாத்லதான் இந்த பையனோட அம்மா ஸமையல் வேலை பாத்துண்டு இருந்தா.! அந்த அம்மா செத்துப் போனதும், என் மூலமாத்தான் இந்த பையனுக்கு தகவல் போச்சு! இவன் தங்கையை அழைச்சிண்டு போகணும்..ன்னும், என் மூலமாத்தான் அவா சொல்லிண்டிருக்கா…….”
மனஸார ஒப்புக்கொண்டார்.
ரொம்ப நல்லதாப் போச்சு! இங்க பாரு… இந்த கொழந்தை…. பெத்தவாளை பறிகுடுத்துட்டு தவிக்கறான்….! இவனோட, இவன் தங்கையையும் ஒன்னோட அழைச்சிண்டு போயி, அவாளை படிக்கவெச்சு, ஆளாக்கறது ஒன்னோட பொறுப்பு! மொதல்ல இவனுக்கு உபநயனம் பண்ணி வை. அவனைப் பெத்தவாளுக்கு கர்மாக்களை அவங்கையால பண்ண வை. ஆகக்கூடி, இவா ரெண்டு பேரோட எதிர்காலத்துக்கும்….. நீதான் எல்லாம் பண்ணணும்….. என்ன செய்வியா?”
அதிகாரிக்கோ ஸந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை! ப்ரமிப்போ அதை விட பன்மடங்கு ! என்ன ஒரு லீலை! எப்படி கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்! எல்லாரையும் விட்டுவிட்டு, தன்னிடம் அவர் கட்டளை இட்டது, தனக்கு கிடைத்த பெரும் பாக்யம் என்று பூரித்துப் போனார்.
அக்ஷணமே பெரியவா பாதத்தில் விழுந்து அந்த பையனையும், அவன் தங்கையையும் தன் ஸொந்தக் குழந்தைகள் போல் பாதுகாப்பதாக உறுதி மொழி குடுத்தார்.
மார்க்கபந்துவான பெரியவாளை நம்பினார், என்றுமே கெடுவதில்லை ! என்று அந்த குட்டிப் பையனுக்குக் கூட தெரிந்திருக்கிறது.
இறை பணியில்
வாசு ஜி.

Monday, 14 March 2016

Mahamanthra of the Supreme given by Periyava

காஞ்சி பெரியவர் அருளிய மகாமந்திரம்!!

காஞ்சி மகா பெரியவரின் குரலை பதிவு செய்து "தெய்வத்தின் குரல்' என்ற தலைப்பில் கட்டுரைகளாக எழுதி இதுவரை ஏழு பாகமாக வெளியிட்டுள்ளவர்.

தெய்வத்தின் குரல் தவிர, காமகோடி, ராமகோடி, காமாஷி, கடாஷி, ஸ்ரீ சாரதாதேவி வாழ்க்கை வரலாறு, அறிவுக்கனலே, அரும்புனலே, ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டவர் ரா.கணபதி

ஆன்மிகம் தொடர்பான புத்தகங்கள் மட்டுமே எழுதியவர். ஆன்மிக எழுத்தின் மீது கொண்ட தாகம் காரணமாக திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தவர். கடந்த  மகாசிவராத்திரியன்று உட்கார்ந்து சிவநாமம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே உயிர் பிரிந்தது.

அவரது எழுத்து என்பது உணர்வு பூர்வமானது, தான் அனுபவித்த சந்தோஷம் வாசகர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற தாகத்தை கொண்ட எழுத்தாகும். சான்றுக்காக அவர் எழுதிய ஒரு கட்டுரை ஒன்று இங்கே இடம் பெறுகிறது. காஞ்சி பெரியவர் அருளிய மகா மந்திரம் தொடர்பான இந்த கட்டுரை மூலம் ரா.கணபதிக்கு எழுத்தால் இங்கே ஒரு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

ஒன்றேயான கடவுளின் பல வடிவங்களான பல தேவதைகளுக்குத்தான் மூல மந்திரங்கள் உள்ளனவே தவிர, மூலமான ஒரே கடவுளுக்கென அந்த மந்திரமும் இல்லாதிருப்பது ஏன் என்பதே கேள்வி.

ப்ரணவம் எனும் "ஓம்' மூலக்கடவுளுக்கே உரித்தான மந்திரந்தான். ஆயினும் வேறு பல மகான்களின் கருத்துக்கு மாறாக, சாஸ்திரக் கருத்தையே மட்டுமே ப்ரணவ ஜபம் செய்யலாம்; ஏனையோர் முதலில் "ஓம்' என்று கூறி அதோடு குறிப்பிட்டதொரு தேவதைக்கான மந்திரத்தைச் சொல்லலாமே தவிர, தனியாக ப்ரணவ ஜபம் செய்யலாகாது என்று கூறி வந்துள்ளனர்.

ப்ரணவம் எனும் ஓம்காரம் நமக்குள் தன்னியல்பாகவே இதயத்தை ஒட்டிய அநாஹத கரத்திலிருந்து எழும் ஒலி; எனவே சிலருக்குத் தன்னியல்பாகவே "ஓம்' என்பது ஒலிக்கும். அவர்கள் மட்டுமே துறவியாய் இல்லாவிடினும் ப்ரணவ ஜபம் செய்யலாம் என்பது ஸ்ரீ பெரியவாளின் கருத்து.

இவ்விஷயமாக ஸ்ரீ பெரியவாளையே கேட்டுத் தெளிவு பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு, அப்பொழுது அவர்கள் முகாமிட்டிருந்த தேனம்பாக்கத்துக்குச் சென்றேன்.
முகாமில் இருந்த கிணற்றின் ஒரு புறத்தில் இருந்த குடிலை ஒட்டிய பகுதியிலிருந்து ஸ்ரீபெரியவாள் தரிசனம் தருவார்கள்; கிணற்றின் மறுபுறத்திலிருந்து மக்கள் தரிசனம் பெறுவார்கள்.

அன்றும் அப்படியே நடந்தது. நாங்கள் 40-50 பேர் இருந்தோம். வழக்கம் போல் அதில் பல்வேறு வயதினரும், பல்வேறு சமூகத்தினரும் இருந்தோம். ஓரிரு வெளிநாட்டவரும் இருந்தனர்.

தரிசனத்தின்போது ஓர் மாது, நேற்றிரவு சொப்பனத்தில் வந்து ஒரு மந்திரம் உபதேசித்தீர்கள்; ஆனால் என் துரதிர்ஷ்டம். இன்று காலை அந்த மந்திரம் மறந்து போய்விட்டது! பெரியவாள் அவசியம் அந்த மந்திரத்தை மறுபடி உபதேசிக்க வேணும். எப்பொழுது மடியாக வந்து அந்தரங்கமாக உபதேசம் பெறலாம்?'' என மிகவும் ஆதுரத்துடன் வினவினார்.

அப்பொழுது சாஸ்திரக் காவலரான ஸ்ரீ பெரியவாளா பேசுகிறார் என்று பேராச்சர்யம் அடையுமாறு அவர்கள் கூறிய மறுமொழி: மடியும் வேண்டாம்; அந்தரங்கமும் வேண்டாம்; பகிரங்கமாக எல்லோருக்குமாக (அம்மந்திரத்தை) சொல்கிறேன்.'' இப்படிச் சொல்லி கணீரென்ற தெய்வத்தின் குரலில், அம் பகவ'': அம் பகவ'': அம் பகவ'': என மும்முறை உபதேசித்தார்கள்.

இப்படியும் மந்திரமூர்த்தியே ஆகிய ஸ்ரீமஹாபெரியவாளிடமிருந்து கேளாமலே உபதேசமா என்ற பேருவகையுடன் அங்கு கூடியிருந்த எல்லோரும் "அம் பகவ': மந்திரோபதேசம் பெற்றோம்.
ஆச்சர்ய உணர்வைத் தொடரும் விதத்தில் அவர்கள் "இதை ஜபிக்க எந்த நியமமும் (விதிமுறையும்) இல்லை. எவரும், எந்த நேரமும் ஜபிக்கலாம்' என்றும் கூறினார்கள்.
ஆகக்கூடி எந்த மந்திர சாஸ்திர நூலிலும் காணப்படாத "அம் பகவ': என்ற மகா மந்திரம் ஸ்ரீ பெரியவாளின் வாய்மொழியில் நமக்கெல்லாம் ஓர் அமுதச்சுனையாகக் கிடைத்துவிட்டது!
"பகவ': என்பதற்கு "பகவானே!' என்று பொருள். "அம்' என்பது ஒரு மங்கல அக்ஷரம்.

நெடுங்காலமாக எனக்குள் இருந்த கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்டது! அனைத்து தெய்வங்களுமான மூலக் கடவுளுக்குரிய மந்திரம் "அம் பகவ!' எந்த தெய்வத்தை இஷ்டமூர்த்தியாகக் கொண்டவரும் இம் மந்திரத்தை அம்மூர்த்திக்குரியதாகக் கருதி ஜபிக்கலாம் என்றும், "பகவ;' என்பது ஆண்பாலில் இருந்தாலும் பெண் தெய்வங்களை ஸ்மரித்தும் இதனை ஜபிக்கலாம் என்று பெரியவரிடமிருந்து விளக்கம் பெற்றோம்.

ஸ்ரீபெரியவாள் தமது நீண்ட நெடிய நூறாண்டு வாழ்வில் அன்று ஒரே ஒருநாள்தான் இப்படியொரு மந்திரத்தை அதுவும் பகிரங்கமாக மொழிந்திருக்கிறார்கள் என்பது இன்னொரு பேராச்சர்யம்!

எல்லோருக்குமான இத் தங்கப் புதையலை 36 ஆண்டுகள் நான் எனக்குள் மட்டுமே வைத்திருக்கிறேன்! சென்ற ஆண்டிலிருந்துதான் எனக்குத் தெரிந்த மற்ற பலருக்கும் இதனைக் கூறி வருகிறேன். அவர்களில் ஸ்ரீ மகா பெரியவர்களையே இஷ்டதேவதையாகக் கொண்ட சிலர் இம்மந்திர ஜபத்தால் தங்களுக்கு விசேஷமான பலன் கிடைப்பதாக உவகையுடன் கூறுகிறார்கள்.

ஆதலால் எல்லோரும் "அம் பகவ" என்னும் மகா மந்திரத்தை முடிந்த வரை சொல்லி கடவுளின் அருள் பெற்றிடுங்கள்..

இறை பணியில்
வாசு ஜி.

Saturday, 12 March 2016

Importance of Feeding poor

இது கதை அல்ல.... உண்மை அன்புக்கு கிடைத்த கௌரவம்.....

வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.

அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம் வரவில்லை.

“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன் பட்டிருக்கிறேன்?”

“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.

அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப் பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.

அன்று முதல் தனது அத்தனை உழைப்பையும் ,கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப் போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.

அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.

“இந்த பில்லை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டு விட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”

அவளுக்கு கண்கள் பனித்தன.

அந்த சிறுவன் வேறு யாருமல்ல…

அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.

அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.

சிந்தித்து பாருங்கள்.அப்போ நாம எவ்வளவு  பெருமையான வாழ்வியல் முறைகளில் வாழ்ந்து அனுபவித்து இருந்தால் திருவள்ளுவருக்கு இப்படி ஒவ்வொன்றுக்கும் எழுதி இருக்க இயலும்!!!....

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)

பொருள் :
வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

மனதில் பதியுங்கள்...

இறை பணியில்
வாசு ஜி.

Dharma weighted by....

தர்ம குணம் படைத்த மன்னன் போஜனிடம் விவசாயி ஒருவர், மகளின் திருமணத்திற்காக பணம் பெற எண்ணினார். தலைநகருக்கு புறப்பட்டார்.

வழியில் சாப்பிட ரொட்டி கட்டிக் கொண்டார்.வழி நெடுக, கடவுளே! திருமணத்திற்கு வேண்டிய அளவு பணம் தர மன்னர் சம்மதிக்க வேண்டும், என வேண்டிக் கொண்டார். பசியெடுக்கவே, ஒரு குளக்கரையில் அமர்ந்து ரொட்டியைக் கையில் எடுத்தார்.மனதிற்குள், இந்தஉணவைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி, என்றார். அப்போது நாய் ஒன்று அவர் எதிரில் எலும்பும், தோலுமாக வந்து நின்றது.

இரக்கப்பட்ட அவர் ஒரு ரொட்டியை அதன் முன்வீசினார். ஒரே விழுங்காக உள்ளே தள்ளிய நாய், மீண்டும் ஆவலுடன் பார்த்தது.இரக்கப்பட்ட விவசாயி அத்தனை ரொட்டியையும் கொடுத்து விட்டார்.ஒரு நாள் சாப்பிடா விட்டால் உயிரா போயிடும்? ராஜா அவர் தகுதிக்கு தானம் கொடுத்தால், பிரஜையான நாமும் முடிந்ததை செய்வது தானே முறை எனதனக்குள் சொல்லிக் கொண்டார். பசியைப் பொறுத்துக் கொண்டுதலைநகரை அடைந்தார்.

அங்கிருந்த தர்மசத்திரத்தில் சாப்பிட்டார். பிறகு மன்னனைச் சந்தித்து, தான் வந்தவிஷயத்தை தெரிவித்தார்.

 போஜன் அவரிடம்,என்னிடம் தர்மம் கேட்டு வந்துள்ளீர்களே! நீங்கள்ஏதாவது தர்மம் செய்திருந்தால் சொல்லுங்கள். அதை நிறுக்கும் தராசு ஒன்று என்னிடம் இருக்கிறது. அது எந்த அளவு எடை காட்டுகிறதோ, அந்த அளவுக்கு தங்கம் வாங்கிக் கொள்ளுங்கள், என்றார் மன்னர்.தர்மம் செய்யுமளவு பணம் இருந்தால், நான் ஏன் உங்களிடம் வரப் போகிறேன்? வழியில் நாய் ஒன்றுக்கு உணவு அளித்தேன். அதற்கு ஈடாக, உங்கள் சத்திரத்தில் சாப்பிட்டு விட்டேன். எனவே. நான் ஏதும் பெரிதாக தர்மம் செய்ததில்லை, என்று அடக்கமாகச் சொன்னார் விவசாயி.உங்கள் பசியைப் பொறுத்துக் கொண்டு நாய்க்கு உணவிட்டதும் புண்ணியமே என்ற போஜன் தராசைக் கையில் எடுத்தார்.

.ஒரு தட்டில் விவசாயி செய்த தர்மத்தையும், மறுதட்டில் தங்கத்தையும் வைத்து நிறுத்தான். கஜானாவில் இருந்த தங்கம் முழுவதும் வைத்தும் கூடதராசுத்தட்டுசமமாகவில்லை. வியந்தமன்னன்,உங்களைப் பார்த்தால் சாதாரணமானவராக தெரியவில்லை. என்னைச் சோதிக்க வந்திருக்கும் தாங்கள் யார்? என்றான். மன்னா! நான் ஒருவிவசாயி. என்னைப்பற்றி சொல்லுமளவு வேறு ஏதுமில்லை, என்றார்பணிவுடன்.அப்போது தர்மதேவதை அங்கு தோன்றினாள். போஜனே! தராசில் நிறுத்துப் பார்ப்பது அல்ல தர்மம். கொடுத்தவரின் மனமே அதன் அளவுகோல். இவர் மனம் மிகவும் பெரியது. அதனால், நீ எவ்வளவு பொன் வைத்தாலும் தராசு முள் அப்படியே தான் இருக்கும். அவர் என்ன கேட்டு வந்துள்ளாரோ, அதைக் கொடுத்தால் போதுமானது, என்றாள். இதை ஏற்ற மன்னன், விவசாயிக்கு வேண்டிய அளவு தங்கம் கொடுத்து வழியனுப்பினான். மகளின் திருமணம் சிறப்பாக நடந்தது.

இறை பணியில்
வாசு ஜி.

Friday, 11 March 2016

Benefits of reading Sundarakandam in Ramayanam

சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும பலன்கள் !!!

1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.

3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.

4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.

5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.

6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.

7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.

8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.

9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.

10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும்.

11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

12. ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.

13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.

14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்” என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.

17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.

18. சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.

19. சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.

20. ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.

21. சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும்.

22. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.

23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும்.

24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.

25. ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.

26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.

27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.

28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.

29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.

30. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது.

31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.

32. சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் மன்பு முதலில் ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன் பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம். (ராமாயணத்தை முழுமையாக படிப்பதா? அதுவும் ஒரே நாளில்… என்று நினைக்கவேண்டாம். அதற்க்கு ஒரு எளிய வழி இருக்கிறது. அடுத்த பதிவில் அது பற்றி சொல்கிறோம்.)

33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது.

34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம்.

35. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.

36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.

37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம்.

38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.

39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம்.

40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்.

Thursday, 10 March 2016

Krishna story 9

லீலை கண்ணன் கதைகள் .........9

ஸ்ரீகிருஷ்ணன் கோகுலத்திற்கு எடுத்து செல்லுதல்.....

சென்ற பதிவில் மகாவிஷ்ணு குழந்தையாக மாறியதை பார்த்தோம் அதன் தொடர்ச்சி இந்த பதிவில் பார்ப்போம்.

தன்னை எடுத்துக் கொண்டு போய் கோகுலத்தில் உள்ள நந்தன் வீட்டில் விட்டுவிடும்படி கிருஷ்ணன் வசுதேவரைக் கேட்டுக்கொண்டார். இது எப்படி முடியும் என்று வசுதேவரும் தேவகியும் திகைத்தார்கள். சிறைக்கதுவுகள் பூடப்பட்டிருப்பதோடு, ஆயுதம் தாங்கிய வீரர்கள் எங்கும் காவல் காத்துக் கொண்டிருந்தனர். வசுதேவர் குழந்தையை மெல்ல எடுத்து அதை ஒரு பிரம்புக் கூடையில் வைத்து கூடையை தம் தலைமேல் வைத்துக் கொண்டார். என்ன வியப்பு! பெரிய பூட்டுகளாலும் சங்கிலிகளாலும் பூட்டப்படிருந்த சிறைக் கதவுகள் தாமாக திறந்துகொண்டன. வியப்புடன் வெளியே வந்தார் வசுதேவர்.

காவலாளிகள் எல்லோரும் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். திடீரென்று ஆகாயத்தில் கருமேகங்கள் சூழ, பெருமழை பெய்தது. ஸ்ரீமகாவிஷ்ணுவுக்குப் படுக்கையாக இருந்த ஆயிரம்தலை ஆதிசேடன் திடீரென்று வசுதேவருக்கு முன்னால் தோன்றினார். தம் தலைவனான கிருஷ்ணன் மழையில் நனைய அவர் எப்படி சம்மதிப்பார்? அதனால் அவர் படம் எடுத்துத் தந்தையும் குழந்தையும் மழையில் நனையாதபடி காப்பாற்றினார்.

பெய்த மழை காரணமாக யமுனாநதி பிரவாகம் எடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதைத் தாண்டித்தான் கோகுலம் செல்ல வேண்டும். என்ன செய்வதென்று தெரியாமல் வசுதேவர் திகைத்து நின்றார். அப்பொழுது திடீரென்று நதி நடுவில் விலகி அவருக்கு வழிவிட்டது. அவர் நதியைக் கடந்து, நேரே நந்தன் வீட்டுக்குச் சென்றார். உடனே நந்தனின் தேவியான யசோதையின் அறைக்குச் சென்றார். வீட்டில் எல்லோருமே ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் யாரும் அவர் வந்ததைப் பார்க்கவில்லை.

யசோதையின் பக்கத்தில் ஒரு பச்சிளம் பெண் குழந்தை இருப்பதைப் பார்த்தார். தாம் கொண்டு வந்திருந்த குழந்தையை யசோதையின் பக்கத்தில் கிடத்திவிட்டு அந்த பெண் குழந்தையை எடுத்து தம் கூடையில் வைத்துக் கொண்டு மீண்டும் மதுரா திரும்பினார். அவர் சிறைக்குள் வந்து சேர்ந்ததும் சிறைக்கதவுகளும் தாமாகவே மூடிக்கொண்டன. நடந்த நிகழ்ச்சிகள் யாருக்கும் தெரியாது.....

இறை பணியில்
வாசு ஜி.

Mouna vratha

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.t
–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
திருவண்ணாமலை கிரிவலத்தை பகவான் எப்போதும் ஊக்குவித்தார். உடல் நலம் குன்றியவர்கள்,முதியவர்கள் கூடகிரிவலம் செல்வதை ரமணர் தடுத்ததில்லை. ‘‘அமைதியாக இறைவனை நினைத்துக் கொண்டு நடந்து செல்லுங்கள்’’என்றே அவர் கூறுவார். அனைவரும் திருவண்ணாமலையைச் சுற்றி வந்து இறைவனின் ஆசியைப் பெற வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். பகவானும் பல முறை கிரிவலம் சென்றுள்ளார். அண்ணாமலையைச் சுற்றி வருவது பற்றி ஒரு உண்மைக் கதையையும் பகவான் பக்தர்களிடம் சொல்வார்.கதையின் க்ளைமாக்ஸ் பகுதியை மட்டும் அவர் சொன்னதேயில்லை.அந்த க்ளைமாக்ஸை பகவானின் அனுக்ரஹத்துடன் நான் உங்களுக்கு இங்கே சொல்லப் போகிறேன்.
திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பைப் பற்றி பகவான் சொல்லும் உண்மைக் கதை இதுதான்.
கால்கள் இரண்டும் உணர்விழந்து தொங்கிப் போன ஒரு பெரியவர், கவட்டுக் கட்டைகளின் உதவியுடன், நொண்டி நொண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தார்.அவர் அதுபோல் அடிக்கடி மலை வலம் வருவது உண்டு. ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி, மிகுந்த சோர்வுடனும் கலக்கத்துடனும் அந்த மாற்றுத் திறனாளி மலையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.
அதற்குக் காரணம் இருந்தது.பல முறை கிரிவலம் வந்திருந்தாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.
ஏன்?
கால்கள் தொய்வுற்ற தான் தன் குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்குத் தோன்றிற்று. குடும்பத்தினருக்குத் தன்னால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.அவர்களுக்குச் சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்று அவருக்குப் புலனாகவே, பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களை விட்டு விலகி, யாரிடமும் சொல்லாமல் கண் காணாமல் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்றுவிடலாம் என்று அந்தப் பெரியவர் முடிவெடுத்தார்.அதனால் கடைசி முறையாக திருவண்ணா-மலைக்கு கிரிவலம் செய்ய வந்திருந்தார்.
விந்தி,விந்தி சூம்பிய கால்களுடன் பெரியவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்தபோது,பாதி வழியில் ஒரு வாலிபன் எதிர்ப்பட்டான்.
பெரியவரை நெருங்கிய வாலிபன், “ஓய், கால் சரியில்லாத நீ கவட்டைக்கட்டையுடன் கிரிவலம் வரவேண்டும் என்று யார் அழுதார்கள்? இப்படி நடந்தால் எல்லாம் நீ மலையைச் சுற்றி வர முடியாது. இதெல்லாம் உனக்குச் சரிப்படாது’’ என்று கூறிக் கொண்டே, எதிர்பாராத ஒரு செயலைச் செய்தான்.
ஆமாம்.அந்தப் பெரியவருக்கு உதவியாக இருந்த கோல்கள் இரண்டையும் வெடுக்கெனப் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு,அவன் பாட்டுக்குச் சென்றுவிட்டான்.
அந்தப் பெரியவருக்குத் தாங்க முடியவில்லை. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வந்தான், திட்டினான், கவட்டைக் கட்டையைப் பிடுங்கினான், தூர எறிந்தான். இப்படியா ஒருத்தன் மனிதாபிமானமே இல்லாமல் இருப்பான்? ஆவேசத்துடன் அவனைத் திட்ட ஆரம்பித்த அந்தப் பெரியவர், ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தார். உடம்பும் மனமும் சிலிர்த்து, அப்படியே நின்றார்.
ஆமாம்.கால் ஊனம் காணாமல் போய்,கவட்டுக் கட்டைகளின் உதவியின்றி ஜம்மென்று நேராய் நின்று கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அந்த இளைஞன் சென்ற திசை நோக்கி அவர் தொழுதார். அவர் கண்களிலிருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது.
அதற்குப் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்தப் பெரியவர் எங்குமே செல்லவில்லை.
இந்த உண்மைச் சம்பவத்தை பக்தர்கள் பலரிடமும் சொல்லியிருக்கிறார் பகவான். இதோ இந்த விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது நடந்த சம்பவம் இது. அந்தப் பெரியவர் அதற்குப் பிறகு பல்லாண்டுகள் இதே திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்ததைப் பலரும் அறிவார்கள். அருணாசல மலையைச் சுற்றி வருவதால் அத்தனை பலன் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே ரமண மகரிஷி இதைச் சொல்வார்.
ஆனால் இந்த உண்மைக் கதையில் பகவான் சொல்லாத ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். பகவான் கடைசி வரை அதன் க்ளைமாக்ஸைத் தன் வாயால் சொல்லவே இல்லை.
ஆமாம். அது என்ன தெரியுமா?
விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது அவரது வயது என்ன? 20. கால் சுவாதீனமில்லாத பெரியவரின் ஊன்றுகோலைப் பிடுங்கி எறிந்து குறும்பு செய்தது யார்? ஓர் இளைஞன்.
ஆமாம். நம் பகவான் ரமண மகரிஷிதான் அந்த இளைஞன்!
எழுதும்போதே மெய் சிலிர்க்கிறது.கால்கள் கொடுத்தவர் பகவான்தான். அவர் செய்யாத அற்புதங்கள் இல்லை.ஆனால் அவர் அதையெல்லாம் சொல்லிக் கொண்டதும் இல்லை.தட்சிணாமூர்த்தியின் அம்சமாயிற்றே. கடவுள் எல்லாம் நன்மைகள் செய்துவிட்டு, தான்தான் செய்தோம் என்று என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா என்ன?நம் குரு தேவரும் அப்படித்தான்.
அப்போது என்று இல்லை.இப்போதும் நீங்கள் ரமணாச்ரமம் சென்று பகவானின் சன்னதி முன்னால் நின்று பாருங்கள்.உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் உடனே தருவார் பகவான். இந்த அனுபவத்தை உணர்ந்தவர்கள் ஆயிரம், ஆயிரம்!
கிரிவலம் சென்றால் இத்தனை நன்மை இருக்கிறதே, அப்படி என்னதான் இருக்கிறது அந்தத் திருவண்ணாமலையில்?
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!

Wednesday, 9 March 2016

Maha Periyava views in living life

பெரியவா சொல்படி வாழும் முறையும், வயஸான பஶுக்கள் ஸம்ரக்ஷணையும்……….
1. காலை ஸூர்யோதயத்துக்கு முன்னால் வீட்டில் உள்ள குழந்தைகள், வ்யாதியஸ்தர்கள், மிகவும் வயஸானவர்கள் தவிர, மற்ற அனைவரும் எழுந்துவிட வேண்டும்.
2. ஆண், பெண் இருவருமே எப்போதுமே நெற்றிக்கு இட்டுக் கொள்ள வேண்டும்.
3. வீட்டில் காலை, மாலை [ஸந்த்யா காலம்] விளக்கேற்ற வேண்டும். நல்லெண்ணெய், நெய் இவற்றால் ஏற்றலாம். வீட்டு வாஸலில் விளக்கு வைப்பது, துர்ஶக்திகள் வீட்டுக்குள் வராமல் ரக்ஷிக்கும்.
4. பெண் குழந்தைகள், கன்யா பெண்கள், ஸுமங்கலிகள் நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமல் இருக்கக் கூடாது. பெண்கள் குங்குமம் வைத்துக் கொள்ளவேண்டும். கருப்பு பொட்டு அமங்கலத்தை தரும். கண்ணுக்குத் தெரியாமல் பொட்டு வைத்துக் கொள்வதும், வைத்துக் கொள்ளாமல் இருப்பதும் ஒன்றுதான்.
5. பெண் குழந்தைகள், கல்யாணமான பெண்கள் தோடு, வளையல் இல்லாமல் இருக்கக் கூடாது. தங்கத்தில் பண்ணிய மெட்டி, கொலுஸு இவைகளை பெண்கள் காலில் அணியக்கூடாது. தங்கத்தில் மஹாலக்ஷ்மி வாஸம் செய்கிறாள்.
இப்போது ஜீன்ஸ் பான்ட் போட்டுக் கொள்வதற்காக, திருமாங்கல்யத்தையே கழட்டி வைத்துவிட்டு போகும் அளவு பெண்கள் ‘முன்னேறியிருக்கிறார்கள்’. பெண்கள் செய்யும் இந்த மாதிரி பல ஆகாத கார்யங்களாலும், ‘பணத்தையும், ஸ்டேடஸ்ஸையும், வெளிநாட்டு மோஹத்தையும்’ மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, பெற்ற குழந்தைகளிலிருந்து, புருஷன், மாமனார், மாமியார் அத்தனை பேரையும் ஒதுக்கிவிட்டு, “தான், தன் சுகம் ” என்று மட்டுமே வாழ்வதாலும், அப்படிப்பட்ட பெண்களை, அவர்களுடைய பெற்றோரும் திருத்தாமல், ஊக்குவிப்பதாலும், அவர்களுடைய இன்றைய கல்யாண வாழ்க்கை, நிம்மதியில்லாமலும், கணவனிடமிருந்தும் உறவுகளிடமிருந்தும் பிரிந்து தனிமைப்படுத்தப்பட்டும், அமங்கலமாக இருப்பதை கண்கூடாக பார்க்கிறோம்.
6. குழந்தைகளுடைய பர்த்டே அன்று மெழுகுவர்த்தி ஏற்றி அதை வாயால் ஊதி அணைப்பது அமங்கலம். குழந்தைகளை விட்டு விளக்கை ஏற்றச் செய்யலாம். நக்ஷத்ரம் வரும் நாள்தான் முக்யம். அன்று கோவிலுக்கு கூட்டிச் சென்று, ஸ்வாமிக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்யலாம். வேத பாடஸாலைகளுக்கோ, ஏழைக் குழந்தைகளுக்கோ, பஶுமாடுகளை ரக்ஷணை செய்யும் இடங்களுக்கோ, நம்முடைய ஶ்ரீமடத்துக்கோ, போய் இயன்றதைக் குடுக்கலாம். குழந்தைகளை விட்டே இந்த நல்ல தர்மத்தை செய்யச் சொல்லலாம்.
7. ப்ராஹ்மணர்கள் என்று மற்ற விஷயங்களுக்கு காட்டிக் கொள்ள விரும்புபவர்கள், முதலில் ஒழுங்காக ஸந்த்யாவந்தனத்தை செய்யவேண்டும். வெறும் காயத்ரி மந்த்ரத்தை மட்டும் சொல்லுவது கூடாது. அர்க்யம் விட்டு முறையாக பண்ண வேண்டும்.
8. ப்ராஹ்மணர்கள் அசைவமான முட்டை போட்ட கேக், பிஸ்கட் மட்டுமில்லாமல், அசைவ உணவையும் ஸாப்பிடுவது மஹா பாபமான செயல்.
9. மது, ஸிகரெட், மற்றும் போதை வஸ்துக்களை பழக்கப்படுத்திக் கொள்ளக் கூடாது. இன்றைக்கு பல ப்ராஹ்மணர்கள், ப்ராஹ்மண பெண்கள் கூட, இம்மாதிரி பல கெட்ட வழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பது வெட்கக்கேடான விஷயம். பஶு மாம்ஸம் உண்ணும் ப்ராஹ்மணர்கள் [என்று சொல்லிக் கொள்பவர்கள்] எத்தனை பூஜையோ, வ்ரதமோ இருப்பதால் இந்த பாபத்தை எத்தனை ஜன்மங்கள் எடுத்தாலும் போக்க முடியாது.
10. பெண்கள் எப்போதுமே புடவைதான் கட்டிக் கொள்ள வேண்டும். ஆண்களே, கால்கள் தெரியும்படி ட்ராயர் போன்றவற்றை அணியாமல், வேஷ்டி அணிய வேண்டும் எனும்போது, பெண்கள் இப்போது வீட்டிலும், வெளியிலும் அணிந்து செல்லும் உடைகள், ஆண்களை விட மோசமாக இருக்கிறது.
11. கோவிலுக்கோ, மஹான்களின் ஆஶ்ரமங்களுக்கோ செல்லும் போது, கட்டாயமாக, ஆண்கள் வேஷ்டியும், பெண்கள் புடவையும், பெண் குழந்தைகள் பாவாடை சட்டையும், கன்யா பெண்கள் தாவணியும் அணிந்து கொண்டுதான் செல்ல வேண்டும். அதையும் கௌரவமான முறையில் அணிய வேண்டும். எப்போதுமே பிறர் கவனத்தை திசை திருப்பும்படியான உடைகளையோ, நகைகளையோ அணிந்து செல்லக் கூடாது.
12. பெண்கள் வீட்டிலும், வெளியிலும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு இருக்கக்கூடாது. இழவு விழுந்த வீட்டில்தான், தலையை விரித்துப் போட்டுக் கொண்டிருப்பார்கள். பெண்கள் தலையை முடிந்து கொள்ளாத வீட்டில் தரித்ரம் தாண்டவமாடும். லக்ஷ்மீகரம் போய்விடும். லக்ஷ்மீகரம் என்றால் வெறும் பணம் காஸு மட்டுமில்லை. மனஸில் ஸந்தோஷம், குடும்பத்தில் அமைதி, நிம்மதி இதெல்லாம்தான் உண்மையான லக்ஷ்மீகரம்.
13. இன்றைக்கு ப்ராஹ்மணர்கள் வீடுகளில்தான், வெங்காயம், பூண்டு இல்லாத ஸமையலே இல்லை. அசைவம் ஸாப்பிடுபவர்கள் கூட, நாள்,கிழமை, அமாவாஸ்யை, மாஹாளயம், நீத்தார் கடன் என்ற திவஸம் போன்ற நாட்களில் மிகவும் ஶுத்தமாக, பயபக்தியோடு இருப்பார்கள். பிறப்பினால் எதுவும் இல்லை; நாம் அப்படி மேன்மையாக வாழ்ந்தால்தான் பெருமை. இல்லாவிடில் வெறும் குலத்தால் எந்த பயனுமில்லை.
14. ஹோட்டல்களில் ஸாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால், ஸுகாதாரமும் கெடும், நம் ஶரீரமும் கெடும், மனதும் கெடும்.
15. காலையில் ஹரி நாமத்தையும், மாலையில் ஶிவ நாமத்தையும், இரவு தூங்கும் முன், அம்பாளையும் த்யானிக்க வேண்டும்.
16. லீவு நாட்களிலாவது, காலை எழுந்து, குளித்து கோவிலுக்குச் சென்று ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். தினமும் ‘walking’ செல்பவர்கள், ஒரு குளியலைப் போட்டுவிட்டு, கோவிலை ப்ரதக்ஷிணம் செய்தால், ஶரீர ஸௌக்யத்தொடு, ஆத்ம லாபமும் கிடைக்கும்.
இதெல்லாம் யாரால்? அதுவும் இந்தக் காலத்தில் எப்படி முடியும்? என்று பலபேர் எண்ணலாம். ஆனால், பெரியவா சொல்வது நம்முடைய நன்மைக்குத்தான்! என்பதை நம்புபவர்கள், தங்களைத் தாங்களே வெகு ஸுலபமாக திருத்திக் கொண்டுவிடலாம்.
“காலம்” என்பது வேறு யாருமில்லை! நாம்தானே! பெரியவா மேல் உண்மையான அன்பு வைத்தால், எதுவுமே ஸாத்யந்தான்! பெரியவா சொல்படி வாழ்ந்தால், நமக்கு கிடைக்கும் ஸந்தோஷமும், நிம்மதியும் ஸாஶ்வதமாக இருக்கும்.
பெரியவாளை விட, பணமும், பகட்டும், நாக்கு ருசியும், தன்ஸுகமும் மட்டுந்தான் முக்யம் என்று நினைத்தால், இந்த பாபங்களிலிருந்து கிடைக்கும் ஸந்தோஷம் போன்றது, க்ஷணத்தில் காலனிடம் பறிபோய்விடும். அப்போது கதறி ப்ரயோஜனமில்லை!

Krishna story 8

லீலை கண்ணன் கதைகள்........8
மகாவிஷ்ணு சிறிய குழந்தையாக மாறினார்.......

ஒருபுறம் வசுதேவர் மகாவிஷ்ணு பிறந்ததைக் கேள்விபட்டதும் கம்சன் ஆயுதத்துடன் தங்களைக் கொல்ல வருவானே! என்று கவலைப்பட்டார்.மறுபுறம் தேவகியும் கம்சனை எண்ணி பயந்து கொண்டுதான் இருந்தாள். ஆனால் இப்பொழுது தன் குழந்தை உருவில் இருப்பதை கண்டதும் இறைவனை துதிக்க ஆரம்பித்தாள். "இறைவனே! தாங்கள் மகாவிஷ்ணுவேதான் என்று எனக்கு விளங்கிவிட்டது. நல்லவர்களை வதைக்கும் கம்சனைத் தயவுசெய்து கொல்லுங்கள். மற்றத் தாய்மார்களைப் போல் நான் தங்களை என்னோடு வைத்துக்கொள்ள முடியாது. தங்களை நான் கம்சனிடம் ஒப்படைக்க வேண்டும். தங்கள் கடவுளாதலால் என் குழந்தைகள் எல்லாவற்றையும் அவன் எப்படிக் கொன்றான் என்பது தங்களுக்குத் தெரியும் . இப்போது எனக்கு இன்னொரு குழந்தை பிறந்துள்ளது என்பதைக் கேட்டவுடன் உடனே இங்கு ஓடிவந்து தங்களைப் இரக்கமின்றி கொன்றுவிடுவான். தாங்கள் தெய்விக உருவில் அவனுக்குக் காட்சியளிக்காதீர்கள். தங்களை பக்தியுடன் பூசிக்க அடியார்கள் காண வேண்டிய திருவுருவம் இது" என்று சொன்னாள்.

கம்சனைபற்றித் தேவகிக்கு இருந்த பயத்தில் அவனால் மகாவிஷ்ணுவைக் கொல்ல முடியாது என்பதை அவளால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. தாயன்பு காரணமாக சாதாரணக் குழந்தையாக மாறும்படி இறைவனை வேண்டிக் கொண்டாள்.

தேவகியின் நல்ல உள்ளதைக் கண்டு மகாவிஷ்ணு மகிழ்ச்சியடைந்தார். அவர் அவளைப் பார்த்து அன்புடன் சொன்னார், "தேவகி! நீ பெண்களுள் பரிசுத்தமானவள். நீ முன்னொரு பிறவியில் என்னை குறித்துத் தவம் செய்தாய். உன் பக்தியில் மகிழ்ந்து, நான் உன் முன்னால் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டேன். நான் உன் மகனாக பிறக்க வேண்டும் என்று நீ கேட்டாய். என்னுடைய பூர்வ அவதாரங்களிலும் நான் உன்னை என் அன்னையாக ஏற்றுக் கொண்டுள்ளேன். அதனால்தான் இப்பொழுதும் நான் உன் மகனாக பிறந்துள்ளேன். நான் உனக்கு முன்னாலும் மகனாகப் பிறந்துள்ளேன் என்று ஞாபகப்படுத்துவதர்காகத்தான் இந்த விஷ்ணு உருவை உனக்குக் காட்டினேன். நான் சாதாரணக் குழந்தையாகப் பிறந்திருந்தால் இறைவன்தான் உனக்கு மகனாகப் பிறந்தார் என்பதை நீ நம்பமாட்டாய்" என்று சொல்லிக் கொண்டே அவர் சாதாரணக் குழந்தையாக மாறினார்..

இறை பணியில்
வாசு ஜி.

Do the job

அவருக்குக் கொஞ்ச நாட்களாகவே வேலைக்குப்
போகப் பிடிக்காமல் ஒரு வித பயம் ஏற்பட்டது;
ஆஃபீஸ் செல்லப் பிடிக்காமல் வீட்டிலேயே இருக்கத்
தோன்றியது. நாளடைவில் தூக்கமின்மையும்
சேர்ந்து கொண்டது. சில  தினங்கள் முன்புதான்
வேலையில் ப்ரமோஷன் வந்திருந்தது அந்தப்
பதவிக்கான வேலைகளை பொறுப்பாகச் செய்ய
இயலவில்லை..மேலதிகாரிகள் அதெல்லாம்
ஒன்றுமில்லை கவலைப்படாதே என ஆறுதல்
சொல்லி வந்தனர்.
தன் மனைவியிடமும், தாயார், தம்பியிடமும்
”நான் வேலைக்குப் போகமாட்டேன்..ஆனால்
அதனால் நம் குடும்பம் கஷ்டப்படுமே ”என்று
மட்டும் சொல்லி வந்தார். வேலைக்கு லீவும்
எழுதிக் கொடுத்து விட்டார். அப்போது
அவர் வயது முப்பத்தெட்டுதான்..
மனமுடைந்து போன மனைவி சில நண்பர்களின்
யோஜனையின் பேரில் அவரைக் காஞ்சிபுரம்
அழைத்துச் சென்றாள். மனைவி பெரியவாளிடம்
நடந்தவற்றை உருக்கமாக எடுத்துச் சொன்னாள்.
ஸ்ரீபெரியவா”நாளிக்கு பூஜைக்கு வா”என்றார்கள்.
அதன்படி மறு நாள் பூஜையில் சென்று அமர்ந்தனர்.
பூஜை முடிந்த பின் கைங்கர்யம் செய்பவர்களிடம்
அபிஷேக ஜலத்தை அவர் தலையின் மேல் கொட்டி
ஸ்னானம் செய்விக்கச் சொன்னார்.
மறு நாள் இவர் ஸ்னானத்திற்கு செல்லும்போது,
எட்ட இருந்த பெரியவா இவரைக் கூப்பிட்டார்.
”வேலைக்குப் போ ”என்று தம் கையில் இருந்த
மரச் சொம்பில் எழுதிக் காண்பித்தார்.
”வேலையில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை”
என்றார் இவர்.
”எல்லாம் தெரியும்…செஞ்சுண்டே வா…போகப் போக
எல்லாம் தெரிஞ்சுடும்”
இதைச் சொல்லி கையில் இருந்த செம்பருத்தி
புஷ்பத்தைச் சாப்பிடச் சொன்னார்.பின்”க்ஷேமமா இரு”
என அந்தக் கருணை  தெய்வம் வாழ்த்தி அனுப்பினார்.
ஐந்தே ஐந்து நாட்களில் மாயாஜாலம் நிகழ்ந்தது!
மனமாற்றம் ஏற்பட்டு, வேலையை ஒழுங்காக
கவனிக்கத் தொடங்கினார். தூங்க ஆரம்பித்தார்!
மஹாஸ்வாமிகள் எனும் மனோதத்துவ டாக்டரால்
முடியாதது ஏதும் உண்டோ இப்பூவுலகில்!
அனுபவம்..திரு குஞ்சித பாதம் அவர்கள்
தகவல் கல்கி.
ஜய ஜய சங்கரா…..