Thursday, 25 February 2016

Your action designs ur LIFE

மனிதன் வாழும் வரை அவன் செய்கின்ற செயல்கள் தான் நிரந்தரம்......
எங்கு போனாலும் இறைவனை காண முடியாது...
உள்ளத்தில் உண்மை உணராமல் அவனை அறிய முடியாது...
வாழும் வரை உத்தமனாக வாழ்ந்து விடு...
நாளை நடப்பது உனக்கு தெரியாது.
நேற்று நடந்தது உன் நிணைவிற்கே....
இன்று செய்யும்  ஒவ்வொரு செயலும் உத்தம்மாக விளங்கட்டும்...
நாளை நீயும் மடிந்து விடுவாய்...
கோடி தெய்வங்கள் இருந்தாலும் உன்னை வழி நடத்தாது....
உண்மை உணர்ந்து உத்தமன் பாதை பிடித்து உண்மையாக வாழ்ந்து விடு
ஆலயங்கள் சென்று வணங்கினாலும் மந்திரங்கள் ஜெபித்தாலும் உன்னை உணராமல் எதையும் சாதிக்க முடியாது..
பள்ளம் மேடு அசிங்கம் நீ பார்த்துதான் நடக்க வேண்டும்...
அறிந்து செயல்படு.
உன் வாழ்கை நீ நடத்தும் உண்மையின் வழியில் தொடருட்டும்.....
உன் நடத்தை போக்கு நிணைவில் உண்மை ஒளிரட்டும்....
தர்மம் மறவாதே...
உன்னை மயக்க பல உருவங்கள் உன்னிடம் உயரந்தவன் என்று கூரும்...மயங்காதே
நீயே உயர்ந்தவன்..
மனதை திடமாக்கு..
உண்மை உணர்.
தெய்வம் நீயே தான்...உன்னை அறிந்தால் நீயே உத்தமன் ஆகிறாய்....
சத்குருவை நம்பு..
உன் உடல் பொருள் ஆவி அனைத்தும். அவரிடம் ஒப்படைத்து நம்பிக்கை விடாமுயற்ச்சி கொண்டு அவர் பாதங்களை தழுவி உண்மை மறவாமல் வாழ்ந்து விடு......
அன்பு நன்றி கருனை உள்ளத்துல் வளர்த்து கொள்...
நீயே கடவுள்..வாழும் வரை உத்தமனாக வாழ்ந்துவிட்டால் நீயே முதன்மையாகிறாய்...மறவாதே....
இன்றே உறுதி கொள்...உன் எண்ணம் தூய்மையடையட்டும்...உண்மை மனதில் நிறுத்திக் கொள்.....
வாழ்க எண்ணம்..
வளர்க உன் உத்தம செயல்..

என்றும் இறைபணியில்
வாசு ஜி.

4 comments:

  1. வாழ்க எண்ணம்..
    வளர்க உன் உத்தம செயல்..

    ReplyDelete
  2. Endrume unmayaga iru..... yaarugavum vendam... unakul nee unmayaga iru eppodhum... vetri nijayam... om sairam..

    Ungaladhu indha ennam valarattum....vazhga valamudan.

    ReplyDelete