Sunday, 22 May 2016

Mahaperiyava Jayanthi May 22nd, Nama Japa

image

Bhagawan Nama 
பகவான் நாமா கைகுடுப்பது போல் எந்த டாக்டரோ, மருந்தோ உதவி பண்ணாது. பகவான் நாமா பிழைக்கவும் வைக்கும், அதே ஸமயம் ஆயுஸ் முடியப்போகும் தருணத்தில், பகவானின் திருவடிப் பேற்றையும் ஸுலபமாக அளித்து விடும்- ஸ்ரீ மஹா பெரியவா
தர்மமே தெரியல!
ஸ்ரீ மஹா பெரியவாளை தர்ஶனம் பண்ண ஒரு பக்தர் வந்தார். கூட்டம் அதிகம் இல்லை.
“அப்பா எப்டியிருக்கார்?”…
“அப்பாக்கு ரொம்ப ஒடம்பு முடிலே பெரியவா……ப்ரக்ஞை இல்லே; அதுனால ஆஸ்பத்ரில சேத்திருக்கேன்…”
மேலே சொல்லு என்பது போல் ஸ்ரீ மஹா பெரியவா உன்னிப்பாக கேட்டார்.
“…பணம் பணம்ன்னு ஆஸ்பத்ரில பிடுங்கி எடுக்கறா…..ட்ரிப்ஸ் ஏத்தறதுக்கு பணம்; ஆக்ஸிஜன் வெக்கறதுக்கு பணம்; அதுக்கு இதுக்குன்னு நின்னா, ஒக்காந்தா பணம் ஒண்ணுதான் கேட்டுண்டே இருக்கா பெரியவா! ஏகப்பட்ட செலவாயிடுத்து…”
“அப்பாவுக்கு என்ன வயஸ்?”
“ஸதாபிஷேகம் ஆய்டுத்து”
“அவரை டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சிண்டு வந்துடு! ஆத்துல ஒரு கட்டில்ல அவருக்கு ஸ்ரமம் இல்லாதபடி ஸௌகர்யமா படுக்க வை; ஜாஸ்தி சூடு இல்லாம, வெதுவெதுன்னு கஞ்சி, பால் இதுமாதிரி நீர்க்க குடு; அவரோட காதுல விழறா மாதிரி தெனோமும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லு; ஆத்துல எல்லாருமா பகவன் நாமாவை சொல்லுங்கோ; ஆத்மார்த்தமா ஸுஸ்ருஷை பண்ணு; இப்டி பண்ணினியானா …….ஒனக்கும் பணச்செலவு இல்லே! அவரும் கடைசி காலத்தை நிம்மதியா கழிப்பார்…..”
மகன் மன த்ருப்தியோடு ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு சென்றார்.
அவர் போனதும் பக்கத்தில் இருந்தவர்களிடம் ஸ்ரீ மஹா பெரியவா சொன்னார்…..
“இப்போல்லாம் யாருக்கும் தர்மமே தெரியறதில்லே! ஒடம்புக்கு கொஞ்….சம் அஸௌகர்யம் வந்துடுத்துன்னா……ஒடனே ஆஸ்பத்ரில சேத்துடறா! வ்யாதிக்கு மருந்து வேணுந்தான்…வாஸ்தவம். ஆனா…..அருமருந்து ஒண்ணு இருக்குங்கறதே யாருக்கும் தெரியறதில்லே!…..”
பகவான் நாமா கைகுடுப்பது போல் எந்த டாக்டரோ, மருந்தோ உதவி பண்ணாது. பகவான் நாமா பிழைக்கவும் வைக்கும், அதே ஸமயம் ஆயுஸ் முடியப்போகும் தருணத்தில், பகவானின் திருவடிப் பேற்றையும் ஸுலபமாக அளித்து விடும்.
எனவே, உடல் நிலை ஸரியில்லாதவர்களை குறிப்பாக வயஸான நம் பெற்றோர், தாத்தா,பாட்டி போன்றோரை, வயஸான காலத்தில் கஞ்சி குடுத்தாலும், அதை அன்போடு குடுத்து, பகவானின் நாமத்தை ஸதா கேட்கவோ, சொல்லவோ வைத்து, அவர்களை நிம்மதியாக வைத்துக் கொள்வதே கடவுளுக்கு மிகவும் பிடித்த கைங்கர்யம்.
அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகள் வேண்டாம், விதவிதமான உணவு வகைகள் வேண்டாம். உண்மையான அன்போடு ஒரு பத்து நிமிஷமாவது அவர்களுக்காக ஒதுக்கி, “ஸாப்பிட்டீர்களா? ஏதாவது வேண்டுமா?” என்று கேட்பதே அவர்களை மனஸார நம்மை வாழ்த்த வைக்கும். அவர்கள் வாழ்ந்த வீட்டை விட, அது குச்சு வீடாக இருந்தாலும் ஸரிதான், தன் மக்களை விட்டுவிட்டு, வேறு எந்த பெரிய ஆஸ்பத்ரியிலும் அவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ காஞ்சி காமகோடி சந்த்ரசேகராய!
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர !ஜெய ஜெய சங்கர!
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர! ஜெய ஜெய சங்கர!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர .. ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சங்கர.
ஸ்ரீ மஹா பெரியவா எனக்கு அபயம் கொடுத்து காத்து ரக்ஷிப்பாய் பரம கருணா சாகரா.
ஸ்ரீ மஹா பெரியவா சரணாரவிந்தங்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்.

இறை பணியில்
வாசு ஜி.

Saturday, 14 May 2016

Simple technic to speak to ur subconscious mind

ஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை

ஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை



ஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை!!!


ஏதாவது ஒரு அமாவாசையன்று 50 கிராம் பசுநெய்யும்,50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும்.இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.விளக்கிலிருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.

108 முறைக்குக்குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்துவரவேண்டும்.வாயாலும் சொல்லலாம்.


ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா

சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வையும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத் தாண்டும் வழிமுறைகளையும் , நீங்கள் கண்கூடாக உணர முடியும். உங்களுக்கு வழிகாட்டுவது அந்த தீபமா அல்லது உங்கள் ஆழ்மனமா ? நீங்களும் அனுபவப் பூர்வமாக உணர்ந்து பாருங்கள்...

இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும்


Friday, 13 May 2016

Lord Krishna showed how will be Kaliyuga

கலியுகம் எப்படி இருக்கும்?

ஒருமுறை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பாண்டவர்களில் நால்வரான பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் கலியுகம் எப்படி இருக்கும் என்று தங்கள் சந்தேகத்தை கேட்டனர். அதற்கு மாதவன், சொல்வதென்ன எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன் என்று கூறி நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தினார். அவற்றை கொண்டு வருமாறு நான்கு பாண்டவர்களிடமும் ஆணையிட்டார். கோவிந்தனின் ஆணைப்படியே நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.

முதலில் பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியைக் கண்டான். அங்கு ஐந்து கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள். சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணற்றில் மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

அர்ஜுனன், அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான பாடலை கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பி பார்த்த அர்ஜுனன் ஒரு கோரமான காட்சியை கண்டான். அங்கு அந்த குயில் ஒரு வெண்முயலை கொத்தி தின்றுகொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்து கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதை எண்ணி குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.

சகாதேவன், கிருஷ்ணரின் அம்பை எடுத்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சியை கண்டான். பசு ஒன்று அழகிய கன்றுக்குட்டியை ஈன்றெடுத்தது. ஈன்ற கன்றை தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய் பசு வருடுவதை நிறுத்தவில்லை. சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அந்த கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது. தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும் என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

நகுலன், கண்ணனின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதைக் கண்டு எடுத்துக்கொண்டு திரும்பினான். மலைமேல் இருந்து, பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது. வழியில் இருக்கும் அனைத்து மரங்களையும், தடைகளையும் இடித்து தள்ளி, வேகமாய் உருண்டு வந்தது. வேகமாக வந்த அந்த பாறை, ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது. ஆச்சரியத்தோடு அதை கண்ட சகாதேவன், தெளிவுபெற பகவானை நோக்கி புறப்பட்டான்,

இவ்வாறு நான்கு பாண்டவர்களும், ஸ்ரீ கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர். அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும், மனதில் உள்ள குழப்பத்தையும், ஞானக்கடலான கிருஷ்ணரிடம் கேட்டனர். கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்.

”அர்ஜுனா, கலியுகத்தில் போலி மதகுருக்கள், ஆசாரியர்கள் போன்றவர்கள் இனிமையாக பேசும் இயல்பும் அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றி பிழைக்கும் கள்வர்களாகவே இருப்பார்கள்.” –குயிலை போல.

”பீமா, கலியுகத்தில் செல்வந்தர்களிடையே ஏழைகளும் வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள். தம்மிடம் செல்வம் வழிந்தாலும், அதில் ஒரு சிறு பகுதியை கூட ஏழைகளுக்கு கொடுத்து உதவ மாட்டார்கள். தங்களிடம் மேலும் மேலும் செல்வம் சேரவேண்டும் என்று நினைத்து பல தவறான வழியில் செல்வதை ஈட்டி சேமித்து வைப்பார்கள். ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்கு நாள் செல்வதர்கள் ஆக, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள்.” – வற்றிய கிணற்றுக்கு அருகாமையில் உள்ள நிரம்பி வழியும் கிணறுகளை போல்.

நகுலா, “கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது மிகுந்த கண்மூடித்தனமான பாசத்தோடு இருப்பார்கள். பிள்ளைகளின் மீது உள்ள அளவற்ற பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும் அதை பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாவார்கள். இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை மறப்பார்கள். பிள்ளைகளும் தீயவினைகளால் துன்பம் அனுபவிப்பார்கள். பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவர்கள்.” -பசுவை போல்.

”நகுலா, கலியுகத்தில் மக்கள் சான்றோர்களுடைய நற்சொற்களைப் பேணாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும் நற்குணத்தினின்றும் நீங்குவார்கள். யார் நன்மைகளை எடுத்து கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுதமாட்டர்கள். எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள். இத்தகையவர்களை இறைவனால் மட்டுமே தடுத்துநிறுத்தி, நிதானப்படுத்தி அறிவுடன் செயல்படுத்த முடியும்.” பாறையை தடுத்த சிறுசெடியை போல்.

இறை பணியில்
வாசு ஜி.

Wednesday, 4 May 2016

What is Happiness?!!

எது மகிழ்ச்சி??
.*******************
கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே " நான் குருடன், உதவுங்கள் " என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.

அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை. அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், சிறுவனுக்கு உதவினான்.
பாக்கெட்டில் இருந்து சில்லரைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டான்.

பின், அருகில் இருந்த பலகையைப் பார்த்தான். இரண்டு நிமிடங்கள் சிந்தித்து விட்டு, பலகையை எடுத்து அதில் இருந்த வாசகத்தை மாற்றினான்.

அவன் சென்ற சிறிது நேரத்திலேயே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பத் தொடங்கியது. சிறுவனுக்கோ ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

வாசகத்தை மாற்றி அமைத்தவர், ஏதேனும் மாற்றம் உண்டா? என்றுப் பார்க்க மீண்டும் அவ்விடத்திற்கு வந்தார். அவர் எதிர் பார்த்தது போலவே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பி இருந்தது.

சிறுவன் அவரின் கால் தடத்தால் வந்த ஓசையை வைத்து அவரைக் கண்டு கொண்டான். நீங்கள் தானே முன்பு வந்து இந்த பலகையை எடுத்து மாற்றினீர்கள். என்ன எழுதி இருந்தீர்கள்.எப்படி இப்போது நிறைய பேர் உதவி இருக்கிறார்கள் என்றான்.

அந்த இரண்டாம் வாசகம் தான் என்ன? எதனால் இம்முறை நிறையப் பேர் பிச்சை இட்டனர்.

இரண்டாம் வாசகத்தில் " இன்று மிகவும் அழகான நாள், அதை என்னால் பார்க்க முடியல்லை" என்று இருந்தது.

இரண்டு வாசகங்களுமே சிறுவன் குருடன் என்பதைத் தான் குறிப்பிடுகின்றன. ஆனால், முதல் வாசகம் சிறுவன் பார்வை இல்லாதவன் என்று மட்டுமே சொல்கிறது. இரண்டாம் வாசகம் நம் அனைவருக்கும் பார்வை இருப்பதை நினைவு படுத்துகிறது. அவனிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருப்பதை கண்டதும் மகிழ்ச்சியில் நிறைய உள்ளங்கள் அவனுக்கு உதவியது.

நீதி : உங்களுக்கு எது கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதற்கு முதலில் நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை உங்களுக்கு அழுவதற்கு 100 காரணங்கள் கொடுத்தால், என்னிடம் சிரிப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கிறது என்றுக் காட்டுங்கள்.

எதைச் சொன்னாலும் மற்றவர் மனம் மகிழும் படிச் சொல்லுங்கள். எதையும் நேர்மறையாய் எதிர் கொள்ளுங்கள். மாற்றிச் சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கை அழகாகும்...

இறை பணியில்
வாசு ஜி.