Thursday, 28 April 2016

Some basic advice for women prescribed in Sashthra...



பெண்களுக்கான சாஸ்திரங்கள்


பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள்
சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது.
இரண்டு கைகளாலும் தலையை சொறியக்கூடாது.
அடிக்கடி வீட்டில் அழுக்கூடாது. இதுவே பீடையை
ஏற்படுத்தும். இதனால் வீட்டில் செல்வம் தங்காத சூழ்நிலை ஏற்படும்.
ஒரு இலைக்கு பரிமாறியதில் இருந்து எடுத்து அடுத்த இலைக்கு பரிமாறுவது நல்லதல்ல.
வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வரும்போதும் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம் போன்றவற்றை கொடுத்து உபசரிப்பது சிறந்தது.
பூசணிக்காயை பெண்கள் உடைக்கக்கூடாது.
கர்ப்பிணி பெண்கள் தேங்காயை உடைக்கக்கூடாது. தேங்காய் உடைக்கும் இடத்திலும் அவர்கள் இருக்கக்கூடாது. காரணம் உடைக்கும் அதிர்ச்சியால் ஏற்படும் நுண்ணலைகள் கர்ப்பத்தை தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் அவர்கள் எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக் கூடாது.
அதிகாலையில் எழுந்து வீட்டு முற்றத்தில் சாணம் தெளித்து கோலம் இட வேண்டும்.
வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தாலும் அவர்களை வைத்து இதை செய்யாமல் வீட்டு எஜமான பெண்ணே இந்த பணியை செய்யும்போது லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.
கைகளால் அன்னத்தையோ, காய்கறிகளையோ பரிமாறக்கூடாது.
வீட்டில் ஒரு பொருள் இல்லாமல் இருந்தால் அதை கணவனிடம் தெரிவிக்கும் போது அது இல்லை என்ற வார்த்தையை கூறாமல் அந்த பொருள் வேண்டும் என்று கூறி வாங்கிவரச் செய்வது சிறந்தது.
இறை பணியில்
வாசு ஜி.

Tuesday, 5 April 2016

Sorgam and Naraham

எது சொர்க்கம்? எது நரகம்?

ஒருவன் ஒரு ரிஷியிடம் ஐயா எனக்கு சொர்க்கம், நரகம் இரண்டையும் பார்க்க எனக்கு ஆவலாக இருக்கிறது, உங்களால் அவற்றை எனக்கு காட்ட முடியுமா என்று கேட்க, அந்த ரிஷியும் அவனை முதலில் நரகத்திற்கு அழைத்து சென்றார். அது  சாப்பாட்டு நேரம். அங்கிருந்தவர்கள் அனைவரும் எதிர் எதிரே வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். சாப்பாடும் பரிமாறப் பட்டது. நரகத்தில் இருந்தவர் களுக்கு தரப்பட்ட தண்டனை என்ன வெனில் அவர்களால் கையை மடக்க முடியாது. சாப்பாட்டைக் கையில் எடுத்தார்களே ஒழிய அதைச் சாப்பிட முடியவில்லை. ஏன்  எனில் அவர்களால் கையை மடக்க முடியாது. கடைசி வரை போராடிவிட்டு சாப்பிடாமலே எழுந்து போனார்கள்.

பிறகு ரிஷி அவனை சொர்க்கத்திற்கு அழைத்துப் போனார். அங்கும் அனைவரும் எதிர் எதிரே வரிசையாக அமர்ந்திருந்தார்கள். அவர்களாலும் கையை மடக்க முடியாது. ஆனால் சாப்பாட்டைக் கையில் எடுத்து ஒருவர் எதிரே இருந்தவருக்கு ஊட்டினான், எதிரே இருந்தவர் இவருக்கு ஊட்டினார். எல்லோரும் சாப்பிட்டுவிட்டு மகிழ்ச்சியாக எழுந்து போனார்கள்.

ஆகவே இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. அடுத்தவருக்கு கொடுக்க மனமில்லாமல் தானே சாப்பிட நினைப்பது நரகம். அடுத்தவருக்குக் கொடுத்துத் தானும் சாப்பிடுவது தான் சொர்க்கம் என்பதாகும் என்ற உண்மையை உணர்ந்து நாமும் இச்சமூகத்தில் பரஸ்பரம் பகிர்ந்து சாப்பிடுவோம்.

திருச்சிற்றம்பலம்!

இறை பணியில்
வாசு ஜி

Monday, 4 April 2016

Know the base rules before fixing the day for Marriage

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்

1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.

…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்

5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.

இறை பணியில்
வாசு ஜி.